4476. செய்தாரே எந்தனுக்கு
இதவுசொல்லி சிறப்புடனே வசுவினியாந்தேவருக்கு
பையவே காலாங்கிசீஷர்தாமும்
பாருலகைகாண்பதற்கு பூபாலன்தான்
துய்யவே குளிகைகொண்டு
சீனம்விட்டு துப்புரவோ மதுடையவாசீர்மந்தான்
வெய்யவே காண்பதற்கு
வந்தாரென்று விருப்பமுடன் வசுவினிக்கு வுரைத்திட்டாரே
விளக்கவுரை :
4477. இட்டாரே எந்தனையும்
சீஷவர்க்கம் எழிலான வசுவினியாந்தேவருக்கு
சட்டமுடன் தாமுரைத்தார்
என்னைப்பற்றஇ தன்மையுள்ள வசுவினியார் தேவர்தானும்
வட்டமுடன் எனையழைத்து
யாரென்றார்பார் வளமையுடன் காலாங்கி சீடனென்றேன்
கட்டமது வாராமல் அடியேனுக்கு
கைவாகு செய்துமல்லோ வணைத்திட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
4478. அணைத்தாரே காலாங்கி சீடனப்பா
அவனியெலாங் குளிகைகொண்டு பறந்தசித்தர்
கணப்பொழுது பூமிதனில்
தங்காசித்து கைலாசம் பறக்குகின்ற கடிகைபாலா
சனப்பொழுது பூமிதனில்
நிற்காவேந்தர் சாங்கமுடன் காலாங்கிக்குகந்த சீடர்
வணக்கமுடன் இணக்கமது
கொண்டசித்தர் வண்மையுள்ள பாலகனே வாவென்றாரே
விளக்கவுரை :
4479. என்றுமே வசுவினியாந்
தேவர்தானும் எழிலான எந்தனையுங் கொண்டனைத்து
குன்றான மகமேரே கோவேகேளும்
குவலயத்தில் சித்தர்களுக்குகந்த சீடா
வென்றிடவே நாற்றிசையும்
போற்றும்பாலா வேதாந்த தாய்தமக்கு உகந்தபாலா
தென்றிசையில் அகத்தியரும்
மெச்சும்நாதா தெளிவான கண்மணியே என்றிட்டாரே
விளக்கவுரை :
4480. கண்ணான கண்மணியே போகநாதா கைலாச ரிஷிகள்முதல் மெச்சும்பாலா
விண்ணுலகில் நவகோடி
ரிஷிகள்தம்மில் விருப்பமுடன் தேர்ந்தெடுத்த வினோதபாலா
தண்ணா சுடர்மணியே
சூட்சாசூட்சம் தாரிணியில் கற்றறிந்த லோகநாதா
வண்ணமுடன் மேதினியில்
கீர்த்திபெற்ற வைராக்கியம் போகரென்று மதித்திட்டாரே
விளக்கவுரை :