போகர் சப்தகாண்டம் 4481 - 4485 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4481 - 4485 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4481. மதித்தாரே எந்தனையும் தேவர்தாமும் மார்க்கமுடன் எந்தன்மேல் பட்சம்வைத்து
துதித்தாரே காலாங்கி நாதர்தம்மை துப்புரவாய் அஞ்சலிகள் மிகவுஞ்செய்து
கதிப்பான சீனபதிவிட்டுநீரும் கண்மணியே யேன்வந்தீர் ஆசீர்மந்தான்
விதிப்புனக்கு இருந்துமல்லோ வந்தீரோதான் விருப்பமுடன் விதியகல வந்திட்டீரே

விளக்கவுரை :


4482. வந்ததொரு வரலாற்றைக் கூறுமென்று வண்மையுடன் தாமுரைத்தார் தேவர்தாமும்
சிந்தனையாய் கேட்குகையில் அடியேன்தானும் சிறப்புடனே வசுவினியாந் தேவருக்கு
சொந்தமுடன் தங்களது வாசீர்மந்தான் துப்புறவாய் காண்பதற்கு வந்ததென்று
இந்தமுடன் அடியேனும் பணிந்துமல்லோ வன்பாக வணங்கிட்டேன் பாதந்தானே

விளக்கவுரை :

[ads-post]

4483. பாதத்தை யான்வணங்கி பரமநாதா பாருலகில் குளிகைகொண்டு வந்தேன்யானும்
நீதமுடன் தங்களது வாசீர்மத்தில் நிலையான வசுவத்தின் மார்க்கந்தன்னை
தோதமுடன் காண்பதற்கு வந்தேன்யானும் தோற்றமுடன் பறக்கின்ற வசுவந்தன்னை
நீதமுடன் அடியேனுங் காணவென்று நீதியுடன் தம்பதிக்கு வருகலாச்சே

விளக்கவுரை :


4484. ஆச்சென்று சொல்லுகையில் அடியேன்தானும் வன்புடனே மனதுவந்து தேவர்தானும்
பாச்சலுடன் தன்பதியி லழைத்துக்கொண்டு பாங்கான குண்ணருகின் மேலேசென்று
வீச்சுடனே பறக்குகின்ற வசுவந்தன்னை விருப்பமுடன் எந்தனுக்குக் காண்பித்தார்பார்
மூச்சடங்கி குளிகையனைக் கையிலேந்தி மூர்க்கமுடன் புரவியின்மேல் ஏறினேனே

விளக்கவுரை :


4485. ஏறினேன் கானகத்தைச் சென்றுயானும் யெழிலான செம்புரவி கொண்டுமல்லோ
தூறினேன் ஆகாயமார்க்கமாக துப்புறவாய் வையகங்கள் எல்லாஞ்சுத்தி
மாறிடவே வசுவினியார் ஆசீர்மந்தான் மகத்தான வலசாரி இடசாரியாக
கூறியதோர் மொழிபடியே யடியேன்தானும் கொண்டுவந்து செம்புரவி நிறுத்தினேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar