4486. நிறுத்தினேன்
ஆகாயப்புரவிதன்னை நீதியுள்ள வசுவினியாந் தேவர்தானும்
கறுப்புடைய செம்புரவி
போகநாதா கருவான குளிகைக்கு கரியுமாச்சோ
துறுப்புநிகர் பலங்குறைந்து
தோர்க்கலாச்சே துப்புரவாய்க் குளிகையது மேலதாச்சோ
பொறுப்புடைய பொன்னுலகப்
புரவிமேலே புகழான சீனபதிமார்க்கந்தானே
விளக்கவுரை :
4487. மார்க்கமுடன் வசுவினியாந்
தேவர்தானும் மகத்தான குளஇகைக்கு வாசீர்மந்தான்
தீர்க்கமுடன் தானுரைத்தார்
தேவர்தானும் தீரமுடன் எந்தன்குளிகைக்கல்லோ
ஏர்க்கவே மெச்சிடவே
ரிஷியார்தாமும் எழிலாக எந்தனுக்கு வசுவந்தன்னை
பார்க்கவே சீனபதிகொண்டுபோக
பரமகுரு வசுவினியாம் விடைதந்தாரே
விளக்கவுரை :
[ads-post]
4488. விடையான தேவரது மொழியுங்கேட்டேன் வீரான புரவியது மகிமைகண்டேன்
நடையுடனே கசம்புரவி
பறக்கும்வேகம் நாதாக்கள் ஒருவருந்தான்கண்டதில்லை
தடைதன்றி செம்புரவி
யடியேன்தானும் தன்மையுடன் பேசுவது மகிமைகண்டேன்
படைமுகமாம் புரவியது
செல்லும்வேகம் பாருலகில் சித்தர்களங் காணார்தாமே
விளக்கவுரை :
4489. காணாரே நாதாந்தசித்துதாமும்
காசினியில் வெகுகோடி கண்டேன்யானும்
தோணாத மகிமையெல்லாம்
யானும்கண்டு துப்புரவாய் யுலகுபதி சுத்திவந்தேன்
நீணவே யசுவினியாந்
தேவர்தம்மால் நிட்களமாய் வினோதமதை யானுங்கண்டேன்
பூணவே யிதிகாச
வித்தையெல்லாம் புகழாக வையகத்தில் கண்டிட்டேனே
விளக்கவுரை :
4490. கண்டேனே புலிப்பாணி
மைந்தாகேளு காசினியில் அசுவினியாம் மகிமைவித்தை
விண்டிடவே
சீனபதிதேசத்தார்க்கு விருப்பமுடன் உரைப்பதற்கு யானுஞ்சொல்வேன்
சண்டமாருதம்போன்ற புரவிதன்னை
சட்டமுடன் சைனத்தார் காணவென்று
கொண்டுமேயான் போரேனப்பாகேளு
குவலயத்தில் ஆச்சரிய மகிமைதானே
விளக்கவுரை :