போகர் சப்தகாண்டம் 4491 - 4495 of 7000 பாடல்கள்
4491. தானான காலாங்கி சொன்னநீதி
தப்பாமல் புலிப்பாணி மைந்தாகேளு
கோனான யெனதையர் கடாட்சத்தாலே
கொற்றவனே ஆகாயப்புரவிகொண்டு
மானான லோகமெல்லாஞ்
சுத்தியேதான் மகத்தான செம்புரவி கடிவாளேந்தி
தேனான சைனபதிதேசமல்லோ
சிறப்புடனே யான்போறேனென்றிட்டாரே
விளக்கவுரை :
4492. இட்டாரே புலிப்பாணி
மைந்தருக்கு யெழிலான வார்த்தையது மிகவுங்கூறி
சட்டமுடன் செம்புரவி
மேலேயேறி தாரணியெல்லாஞ் சுத்திமகிமைபூண்டு
திட்டமுடன் சைனபதி
தேசந்தன்னில் சிறப்புடனே செம்புரவி இறக்கினேன்யான்
மட்டவிழ் பூங்கோதையர்கள்
எல்லாருந்தான் மார்க்கமுடன் எந்தனையே சூழ்ந்திட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
4493. சூழ்ந்தாரே சைனபதிபெண்களோடு
சுத்தமுள்ள மாண்பர்களு மொன்றாய்கூடி
தாழ்ந்ததொரு ஆகாயபுரவிதன்னை
சட்டமுடன் எல்லவரும் கண்டுஏங்கி
வாழ்ந்தோமே வையகத்தில்
வெகுகாலந்தான் வன்மையுள்ள வதிசயங்கள் அனேகங்கண்டோம்
வீழ்ந்ததொரு
ஆகாயந்தனிலிறங்கி விடுபுரவி மகிமையது கூறப்போமோ
விளக்கவுரை :
4494. கூறவென்றால் நாவில்லைப்
பாவுமில்லை குவலயத்தில் பொற்புரவி புதுமையாவும்
மாறலுடன் வெகுகோடி
வித்தைதானும் மன்னவனே போகர்முனி நாதர்நீயும்
தூறலன்றி எங்களுக்கு
வதிதமார்க்கம் துப்புரவாய் வுபதேசம் செய்வீரல்லோ
சீரலது வாராமல்
நாங்களுந்தான் சிறப்புடனே வுபதேசம் பெற்றோங்காணே
விளக்கவுரை :
4495. காணவே யுபதேசம் அதிகங்கொண்டு
கருத்துடனே சீனபதிவாழ்ந்திருந்தோம்
பூணவே வெகுதேச வதிசயங்கள்
புகழாகத் தாமுரைப்பீர் எங்களுக்காய்
ஆணவமாம் அசுவமதின்
மகிமைதன்னை வன்புடனே வையகத்தில் கண்டதில்லை
நீணவே வாகாயபுரவிதானும்
நேர்மையுடன் கண்டதொரு மகிமைபாரே
விளக்கவுரை :