போகர் சப்தகாண்டம் 4566 - 4570 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4566. கண்டாரே ரெண்டாங்கால் சுனையிலப்பா கருவாக போகரிஷிமுனிவர்தானும்
கண்டாரே படுமுதலை சுனையிலப்பா கருவாக சுந்தரமூர்த்திதன்னால்
கண்டாரே வந்ததொரு முதலையப்பா கனமுடனே மதலைதனைவிழுங்கிவிட்ட
கண்டாரே முதலைதனைபார்த்துமல்லோ கனத்ததொரு விசாரமது கொண்டிட்டாரே

விளக்கவுரை :


4567. கொண்டதொரு போகரிஷிநாதர்தம்மை குன்றான மலைதனிலே இருக்குஞ் சித்தர்
கண்டுமே போகரிஷிநாதர்பக்கல் கனமுடனே சித்தர்முனி கூட்டமெல்லாம்
மண்டலத்தில் காணாதவதிசயங்கள் மகத்தான மலைமீதிற் கண்டோமென்று
விண்டுமே தங்கள் தங்கள் மனதிலெண்ணி விருப்பமுடன் போகர்பக்கல் வந்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

4568. வந்துமே போகரிஷி பக்கல்நின்று மகத்தான முனிக்கூட்டம் தேவர்கூட்டம்
அந்தமுடன் ஆயிரம்பேர் வோடிவந்து ஆங்கார கோபமது சிகரமிஞ்சி
இந்ததொரு மலைமீதில் வந்தபாலன் எழிலான வரலாற்றை அறிவோமென்று
சிந்தனையா யத்திரள்கூட்டம் படைகளோடு தீர்த்தமுடன் போகர்பக்கல் வந்தார்தானே

விளக்கவுரை :


4569. தானான போகரிஷிநாதர்தம்மை தண்மையுள்ள சிறுபாலா யாரென்றார்கள்
கோனான காலாங்கி நாதர்தம்மை கொற்றவனார் போகரிஷிக்கனைத்துமல்லோ
பானான யென்குருவே எந்தன்நாதா பட்சமுடன் இவ்வேளைப் பாதுகாத்து
தேனான மனோன்மணியாள் கடாட்சந்தன்னால் தேர்வேந்தரெந்தனையும் ரட்சிப்பீரே

விளக்கவுரை :


4570. இரட்சித்துக் காத்தருள வேண்டுமென்றும் யியலான போகரிஷிவணங்கியல்லோ
பரமவொளி கைலங்கிரி நாதாபோதா பாருலகில் உன்னைவிட சித்துமில்லை
நிரந்தரமாய் நிரைந்த பராபரமே போற்றி நிட்களங்கமானதொரு நிதியேபோற்றி
வரந்தந்து எந்தனையுங் கார்க்கவென்று வாகுடனே போகரிஷி பணிந்திட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4561 - 4565 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4561. இட்டாரே மாண்பரெல்லாம் இதயம்கூர்ந்து எழிலான மனதுவந்து நிற்கும்போது
சட்டமுடன் காலாங்கி சீஷர்தாமும் சதுரான சீனபதிவிட்டுமல்லோ
அட்டதிக்கு காணுதற்கு குளிகைகொண்டு அவனியெலாஞ் சுத்திவருங்காலந்தன்னில்
பட்டமது பகற்கால முச்சிதன்னில் பாரினிலே கிக்கிந்தா ரிஷிகண்டாரே

விளக்கவுரை :


4562. கண்டாரே போகரிஷி நாதர்தாமுங் காசினியில் கிக்கிந்தா மலையைக்கண்டு
அண்டமுடன் தேவாதிதேவரெல்லாம் வன்புடனே தானிறங்கும் மலையென்றெண்ணி
கொண்டர்களுஞ் சித்தர்முனி இருக்கும்நாடு துரைராச கிக்கிந்தா மலைவளத்தை
சண்டமாருதம்போலே போகர்தானும் சட்டமுடன் கண்டுமல்லோ இறங்கினாரே 

விளக்கவுரை :

[ads-post]

4563. இறங்கியே போகமுனி ரிஷியார்தாமும் எழிலாகக் கிக்கிந்தா மலையினுச்சி
சுறங்கமென்ற மேற்கனையில் வந்துநின்று துரைராஜர் வடிவேலர் சுனையைக்கண்டு
கரந்தட்டி காசிவிஸ்வநாதர் தம்மை கருத்தினிலே தானினைத்து கூப்பிட்டேன்தான்
வறமுடனே மச்சமென்ற மீனைத்தானும் வாகுடனே கரந்தட்டி யழைத்திட்டாரே

விளக்கவுரை :


4564. தட்டியே போகரிஷிநாதர்தாமும் தகமையுடன் வடிவேலர் சுனையில்நின்று
எட்டியே சுனைதனையே பார்த்துமல்லோ யெழிலான காசியென்ற விசுவர்தம்மை
அட்டில்லா தனையழைக்க மச்சந்தானும் வன்புடனே போகரிஷிசத்தங்கேட்க
கொட்டியெனுஞ் சுனைதனிலே மச்சக்கூட்டம் சுந்தரரைக் காணவல்லோ வருகலாச்சே

விளக்கவுரை :


4565. ஆச்சப்பா போகரிஷிமுனிவர்தானும் வன்புடனே மச்சமென்ற சுனையைத்தாண்டி
பாச்சலுடன் ரெண்டாங்கால் வரையிலப்பா பாங்கான போகரிஷிமுனிவர்தானும்
பாச்சலுடன் கெவனமென்ற குளிகைதன்னை மகத்தான போகரிஷிமுனிவர்தானும்
வீச்சுடனே குளிகைசென்று போகும்போது வீறான தடந்தனிலே தனைக்கண்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4556 - 4560 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4556. வருகின்ற நாளாச்சு சித்துதாமும் வண்மையுடன் சீஷவர்க்கம் முன்னேநிற்க
பெருகவே சமாதியின்தன் பாறைதானும் பேரான நாள்வருகுங்காலந்தன்னில்
வுருவுடைய பாறையது வெடிக்கலாச்சு ஓகோகோ நாதாந்த சித்துதாமும்
சொரூபமென்ற ஜெகஜோதி மின்னல்போல சுந்தரனார் சித்தொளிவும் வந்திட்டாரே

விளக்கவுரை :


4557. வந்திட்டார் நாதாந்த சித்துதாமும் வையகத்தின் பவக்கடலை காணுதற்கு
சொந்தமுடன் சீஷவர்க்கமெல்லோருந்தான் சொர்ணமென்ற சித்தொளிவைக் கண்டாரங்கே
அந்தமுடன் சித்தொளிவு சொன்னவாக்கு அவனிதனில் மெய்யாச்சோ பொய்யுமாச்சோ
சுந்தரம்போல் வாய்திறந்து ரிஷியார்தாமும் சூட்சமுடன் சுந்தரரைக் கேட்டிட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

4558. கேட்டாரே கிக்கிந்தா மலையின்வேந்தன் கீர்த்தியுடன் இவ்வுலகில் இருக்கிறாரே
நீட்டமுடன் யானுரைத்த வாக்குவண்ணம் நீடாழியுலகமதில் வுறுதியாச்சோ
தாட்டிகமாய் சித்துமுனி வுரைக்கும்போது தண்மையுடன் சீஷவர்க்க மாண்பரெல்லாம்
மாட்டிமையாய் நிறைவேறிப் போச்சுதென்று மகதேவர் என்றுசொல்லி வணங்கிட்டாரே

விளக்கவுரை :


4559. வணங்கியதோர் சீடருக்கு உபதேசங்கள் வளமாகத் தாமுரைத்தார் ரிஷியார்தாமும்
இணங்கியே கிக்கிந்தா மலையின்மேலே எழிலான கிக்கிந்தா ரிஷியார்தாமும்
மணங்கமழுஞ் சமாதிவட்டு முனிவர்தானும் மார்க்கமுடன் சமாதிவட்டு வந்துநின்றார்
சுணங்கமது வாராமல் ரிஷியாருக்கு சுத்தமுடன் ரிஷியாருஞ் சூழ்ந்திட்டாரே

விளக்கவுரை :


4560. சூழ்ந்துமே அஞ்சலிகள் ஆசீர்மங்கள் சுத்தாதி மாந்தர்முதல் வேந்தர்யாவும்
தாழ்ந்துமே சிறங்குனிந்து வனங்கனிந்து சட்டமுடன் ரிஷியாரைத் தோத்தரித்து
வீழ்ந்துமே பதாம்புயத்தைப் போற்றிநின்று வீறான வுபதேசம் பெறுவதற்கு
ஆழ்ந்துமே பவக்கடலை விட்டகற்றி வன்புடனே கார்த்தருளு மென்றிட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4551 - 4555 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4551. மூடினார் சீஷவர்க்க மாண்பரெல்லாம் மூதுலகைக் கண்டதொரு சித்துதாமும்
நீடியே வருவதற்கு முன்னதாக நிட்களங்கமானதொரு வாக்குதானும்
கூடியே நான்வருகுங்காலமப்பா கொற்றவனே அறுபத்து வாண்டுமாகும்
தேடியே நிங்களெல்லாஞ் சமாதிபக்கல் தேற்றமுடன் காத்திருக்க வென்றிட்டாரே

விளக்கவுரை :


4552. என்றுமே நான்வருகுங்காலந்தன்னில் எழிலான சப்பாணி நடப்பான்பாரு
குன்றின்மேல் மேயுகின்ற மிருகமெல்லாம் கொப்பெனவே வாய்ஞானம் மிகவேகூறும்
வென்றிடவே குருடனவன் கண்திறப்பான் வேதாந்தம் வூமையன் மிகவேசொல்வான்
நன்றான பட்சியது ஞானம்கூறும் நாதாந்த சித்துவருங் காலமாச்சே

விளக்கவுரை :

[ads-post]

4553. ஆச்சப்பா புலிபசுவு மொன்றாய்கூடி அடர்ந்ததொரு பொய்கைதனில் நீரையுண்ணும்
பாச்சலுடன் நரிவந்து கரியைவெல்லும் பாங்கான பரியதுவும் அரியைவெல்லும்
மேச்சலுடன் சந்திரனுங் கலைகள்மாறி மிக்கான நிலைதனிலே நிற்பான்பாரு
காச்சலுடன் கதிரோனுந் திசைகள்மாறி கண்ணுக்குத் தோற்றாமல் நிற்பான்பாரே

விளக்கவுரை :


4554. பாரேதான் காலாங்கி சொன்னநீதி பட்சமுடன் யிவ்வுலகில் மெய்யதாச்சு
நேரேதான் பூவுலகில் அப்பாகேளு நெடிதான பட்டமரந் துளித்துநிற்கும்  
சீரேதான் பிரளயங்கள் அதிகங்காணும் சிறப்பான சித்தரெல்லாம் முன்னேநிற்பார்
கூரான யிவ்வண்ண வதிசயங்கள் குவலயத்தில் நடக்குமென்று சொல்லிட்டாரே

விளக்கவுரை :


4555. சொல்லவே கிக்கிந்தாரிஷியார்தாமும் சுத்தமுடன் சித்துவருங்காலமாச்சு
வெல்லவே அறுபத்து வாண்டுமாச்சு வேதாந்த சித்துவருங்காலமாச்சு
புல்லவே சமாதியிட மாண்பரெல்லாம் புகழான சித்துமுனி கூட்டத்தோடும்
வல்லதொரு நாதாந்த முனிவர்தானும் வளமையுடன் சமாதிவிட்டு வருநாளாச்சே

விளக்கவுரை :


Powered by Blogger.