4551. மூடினார் சீஷவர்க்க
மாண்பரெல்லாம் மூதுலகைக் கண்டதொரு சித்துதாமும்
நீடியே வருவதற்கு முன்னதாக
நிட்களங்கமானதொரு வாக்குதானும்
கூடியே நான்வருகுங்காலமப்பா
கொற்றவனே அறுபத்து வாண்டுமாகும்
தேடியே நிங்களெல்லாஞ்
சமாதிபக்கல் தேற்றமுடன் காத்திருக்க வென்றிட்டாரே
விளக்கவுரை :
4552. என்றுமே
நான்வருகுங்காலந்தன்னில் எழிலான சப்பாணி நடப்பான்பாரு
குன்றின்மேல் மேயுகின்ற
மிருகமெல்லாம் கொப்பெனவே வாய்ஞானம் மிகவேகூறும்
வென்றிடவே குருடனவன்
கண்திறப்பான் வேதாந்தம் வூமையன் மிகவேசொல்வான்
நன்றான பட்சியது ஞானம்கூறும்
நாதாந்த சித்துவருங் காலமாச்சே
விளக்கவுரை :
[ads-post]
4553. ஆச்சப்பா புலிபசுவு
மொன்றாய்கூடி அடர்ந்ததொரு பொய்கைதனில் நீரையுண்ணும்
பாச்சலுடன் நரிவந்து
கரியைவெல்லும் பாங்கான பரியதுவும் அரியைவெல்லும்
மேச்சலுடன் சந்திரனுங்
கலைகள்மாறி மிக்கான நிலைதனிலே நிற்பான்பாரு
காச்சலுடன் கதிரோனுந்
திசைகள்மாறி கண்ணுக்குத் தோற்றாமல் நிற்பான்பாரே
விளக்கவுரை :
4554. பாரேதான் காலாங்கி சொன்னநீதி
பட்சமுடன் யிவ்வுலகில் மெய்யதாச்சு
நேரேதான் பூவுலகில்
அப்பாகேளு நெடிதான பட்டமரந் துளித்துநிற்கும்
சீரேதான் பிரளயங்கள்
அதிகங்காணும் சிறப்பான சித்தரெல்லாம் முன்னேநிற்பார்
கூரான யிவ்வண்ண வதிசயங்கள்
குவலயத்தில் நடக்குமென்று சொல்லிட்டாரே
விளக்கவுரை :
4555. சொல்லவே
கிக்கிந்தாரிஷியார்தாமும் சுத்தமுடன் சித்துவருங்காலமாச்சு
வெல்லவே அறுபத்து
வாண்டுமாச்சு வேதாந்த சித்துவருங்காலமாச்சு
புல்லவே சமாதியிட
மாண்பரெல்லாம் புகழான சித்துமுனி கூட்டத்தோடும்
வல்லதொரு நாதாந்த
முனிவர்தானும் வளமையுடன் சமாதிவிட்டு வருநாளாச்சே
விளக்கவுரை :