4556. வருகின்ற நாளாச்சு
சித்துதாமும் வண்மையுடன் சீஷவர்க்கம் முன்னேநிற்க
பெருகவே சமாதியின்தன்
பாறைதானும் பேரான நாள்வருகுங்காலந்தன்னில்
வுருவுடைய பாறையது
வெடிக்கலாச்சு ஓகோகோ நாதாந்த சித்துதாமும்
சொரூபமென்ற ஜெகஜோதி
மின்னல்போல சுந்தரனார் சித்தொளிவும் வந்திட்டாரே
விளக்கவுரை :
4557. வந்திட்டார் நாதாந்த சித்துதாமும் வையகத்தின் பவக்கடலை காணுதற்கு
சொந்தமுடன்
சீஷவர்க்கமெல்லோருந்தான் சொர்ணமென்ற சித்தொளிவைக் கண்டாரங்கே
அந்தமுடன் சித்தொளிவு
சொன்னவாக்கு அவனிதனில் மெய்யாச்சோ பொய்யுமாச்சோ
சுந்தரம்போல் வாய்திறந்து
ரிஷியார்தாமும் சூட்சமுடன் சுந்தரரைக் கேட்டிட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
4558. கேட்டாரே கிக்கிந்தா
மலையின்வேந்தன் கீர்த்தியுடன் இவ்வுலகில் இருக்கிறாரே
நீட்டமுடன் யானுரைத்த
வாக்குவண்ணம் நீடாழியுலகமதில் வுறுதியாச்சோ
தாட்டிகமாய் சித்துமுனி
வுரைக்கும்போது தண்மையுடன் சீஷவர்க்க மாண்பரெல்லாம்
மாட்டிமையாய் நிறைவேறிப்
போச்சுதென்று மகதேவர் என்றுசொல்லி வணங்கிட்டாரே
விளக்கவுரை :
4559. வணங்கியதோர் சீடருக்கு
உபதேசங்கள் வளமாகத் தாமுரைத்தார் ரிஷியார்தாமும்
இணங்கியே கிக்கிந்தா
மலையின்மேலே எழிலான கிக்கிந்தா ரிஷியார்தாமும்
மணங்கமழுஞ் சமாதிவட்டு
முனிவர்தானும் மார்க்கமுடன் சமாதிவட்டு வந்துநின்றார்
சுணங்கமது வாராமல்
ரிஷியாருக்கு சுத்தமுடன் ரிஷியாருஞ் சூழ்ந்திட்டாரே
விளக்கவுரை :
4560. சூழ்ந்துமே அஞ்சலிகள்
ஆசீர்மங்கள் சுத்தாதி மாந்தர்முதல் வேந்தர்யாவும்
தாழ்ந்துமே சிறங்குனிந்து
வனங்கனிந்து சட்டமுடன் ரிஷியாரைத் தோத்தரித்து
வீழ்ந்துமே பதாம்புயத்தைப்
போற்றிநின்று வீறான வுபதேசம் பெறுவதற்கு
ஆழ்ந்துமே பவக்கடலை
விட்டகற்றி வன்புடனே கார்த்தருளு மென்றிட்டாரே
விளக்கவுரை :