4561. இட்டாரே மாண்பரெல்லாம்
இதயம்கூர்ந்து எழிலான மனதுவந்து நிற்கும்போது
சட்டமுடன் காலாங்கி
சீஷர்தாமும் சதுரான சீனபதிவிட்டுமல்லோ
அட்டதிக்கு காணுதற்கு
குளிகைகொண்டு அவனியெலாஞ் சுத்திவருங்காலந்தன்னில்
பட்டமது பகற்கால
முச்சிதன்னில் பாரினிலே கிக்கிந்தா ரிஷிகண்டாரே
விளக்கவுரை :
4562. கண்டாரே போகரிஷி நாதர்தாமுங்
காசினியில் கிக்கிந்தா மலையைக்கண்டு
அண்டமுடன் தேவாதிதேவரெல்லாம்
வன்புடனே தானிறங்கும் மலையென்றெண்ணி
கொண்டர்களுஞ் சித்தர்முனி
இருக்கும்நாடு துரைராச கிக்கிந்தா மலைவளத்தை
சண்டமாருதம்போலே போகர்தானும்
சட்டமுடன் கண்டுமல்லோ இறங்கினாரே
விளக்கவுரை :
[ads-post]
4563. இறங்கியே போகமுனி
ரிஷியார்தாமும் எழிலாகக் கிக்கிந்தா மலையினுச்சி
சுறங்கமென்ற மேற்கனையில்
வந்துநின்று துரைராஜர் வடிவேலர் சுனையைக்கண்டு
கரந்தட்டி காசிவிஸ்வநாதர்
தம்மை கருத்தினிலே தானினைத்து கூப்பிட்டேன்தான்
வறமுடனே மச்சமென்ற
மீனைத்தானும் வாகுடனே கரந்தட்டி யழைத்திட்டாரே
விளக்கவுரை :
4564. தட்டியே போகரிஷிநாதர்தாமும்
தகமையுடன் வடிவேலர் சுனையில்நின்று
எட்டியே சுனைதனையே
பார்த்துமல்லோ யெழிலான காசியென்ற விசுவர்தம்மை
அட்டில்லா தனையழைக்க
மச்சந்தானும் வன்புடனே போகரிஷிசத்தங்கேட்க
கொட்டியெனுஞ் சுனைதனிலே
மச்சக்கூட்டம் சுந்தரரைக் காணவல்லோ வருகலாச்சே
விளக்கவுரை :
4565. ஆச்சப்பா போகரிஷிமுனிவர்தானும் வன்புடனே மச்சமென்ற சுனையைத்தாண்டி
பாச்சலுடன் ரெண்டாங்கால்
வரையிலப்பா பாங்கான போகரிஷிமுனிவர்தானும்
பாச்சலுடன் கெவனமென்ற
குளிகைதன்னை மகத்தான போகரிஷிமுனிவர்தானும்
வீச்சுடனே குளிகைசென்று
போகும்போது வீறான தடந்தனிலே தனைக்கண்டாரே
விளக்கவுரை :