4546. ஏகுவேன் சமாதிக்கு
சீஷவர்க்கம் எழிலான கிக்கிந்தா மலைக்குமேற்கு
ஆகுடனே சமாதியது தோண்டவென்று
வன்புடனே சீஷருக்கு விடைகொடுக்க
பாருமொழிதவறாமல் சீஷவர்க்கம்
பண்புடனே சென்றார்கள் மலையோரத்தில்
வேகுடனே சமாதியது கட்டவென்று
வெளிப்பட்டுத் தான்தொடர்ந்தார் மாண்பர்தானே
விளக்கவுரை :
4547. மாண்பான சீடர்களுஞ்
சமாதிகட்டி மார்க்கமுடன் கிக்கிந்தா ரிஷியாருக்கு
ஆண்பான சமாதியது கட்டியல்லோ
அழகான பாறையது மேலேவைத்து
காண்பான ரிஷியாருக்கு
முன்னேநின்று கர்த்தாவே கிக்கிந்தா மலைதான்சித்தே
நீண்பான சமாதியது
முடிந்ததென்று நிஷ்டைவிட்டு வருகவென்று பணிந்திட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
4548. பணிந்துமே மாண்பரெல்லாம்
தொழுகும்போது பட்சமுள்ள கிக்கிந்தா ரிஷியார்தாமும்
துணிந்துமே கிக்கிந்தா
மலையைவிட்டு துப்புரவாய் வெகுஜனங்கள் பின்னடக்க
அணியணியாய் மாண்பர்களும்
கூட்டத்தோடு வன்பான ரிஷியாரும் முன்னடக்க
கணிவுடனே கிக்கிந்தா மலைக்கு
மேற்கே கர்த்தாவும் சமாதிபதி வந்திட்டாரே
விளக்கவுரை :
4549. வந்ததொரு ரிஷியாருஞ் சமாதிகண்டு வளமையுடன் மாண்பர்களை நோக்கங்கொண்டு
அந்தமுடன் அடியார்கள்
தன்னைநோக்கி வன்புடனே மனதுவந்து வார்த்தைசொல்வார்
இந்ததொரு வையகத்தின்
ஆசைவிட்டேன் யெழிலான சமாதிக்கு செல்வேனப்பா
சொந்தமுடன் பாறையது
மூடியல்லோ சுத்தமுடன் காத்திருங்கள் என்றிட்டாரே
விளக்கவுரை :
4550. என்றுமே நாதாந்த
சித்துதாமும் எழிலான சமாதிதனி லிரங்கும்போது
குன்றான மகமேரே மாண்பரேகேள்
குறிப்பான சமாதிதனிலிறங்கிறேன்யான்
வென்றிடவே பாறைகளை மூடவென்று
வெழ்க்கமுடன் குருவாக்குகூறும்போது
அன்றுரைத்த மொழிபோலே
மாண்பரெல்லாம் வன்பாகப்பாறைதனை மூடிட்டாரே
விளக்கவுரை :