4541. தாமான சித்துமகா சொரூபரப்பா தாரணியில் வெகுகாலங் கடந்தசித்து
கோமான்கள் இருந்ததில்லை
கொடியசித்து கொற்றவனே போகரிஷியறியமாட்டாய்
பூமானாம் உனதையர்
காலாங்கிநாதர் புகழுடனே கண்டறிந்த சித்துவாகும்
நாமாக வறிந்தபடி சொன்னேனப்பா
நாட்டிலே யாரேனுஞ் சொல்லார்தாமே
விளக்கவுரை :
4542. சொல்லாரே கிக்கஇந்தா
மலைதானுள்ளே சொரூபமென்ற சித்துமகா ரிஷியார்தாமும்
வெல்லவே வெகுகாலம்
மலையின்மேலே வேழ்க்கையுடன் தாமருந்தார் ரிஷியார்தாமும்
புல்லவே சமாதிக்கு ஏகவென்று
புகழான சீஷவர்க்கந் தன்னோடொக்க
அல்லல்படத்த வையகத்தில்
ஆசைவிட்டு வன்புடனே தானெழுந்தார் ரிஷியார்தானே
விளக்கவுரை :
[ads-post]
4543. தானான கிக்கிந்தா
ரிஷியார்தாமும் தகமையுடன் சீஷவர்க்கந்தன்னைநோக்கி
கோனான எனதையர்
திருவேலரிஷியார் கொற்றவனாருத்தாரப்படியேதானும்
பானான சமாதிக்கு
செல்வேனென்று பட்சமுடன் சீஷருக்குத்தாமுரைத்து
தேனான கிக்கிந்தா
மலைக்குமேற்கே தீரமுடன் புறப்பட்டார் சித்துதாமே
விளக்கவுரை :
4544. சித்தான கிக்கிந்தா
மலைதான்சித்து சிறப்பான சீடருக்குத் தாமுரைப்பார்
முத்தான திருவேலர்
ரிஷியார்வாக்கு மூதுலகைக் கண்டதொரு ரிஷியார்தாமும்
எத்தனையோ வரைகோடிகாலமப்பா
ஏற்றமுடன் வையகத்தில் இருந்தார்தானும்
பத்தியுடன் லோகமதில்
இருந்துமேதான் பாருலகில் லாபமதைக் காணார்பாரே
விளக்கவுரை :
4545. காணாரே திருவேல
ரிஷியார்தாமும் காசினியில் நாலுயுகமிருந்துமென்ன
தோணாத காயகற்பம் கொண்டுமென்ன
துப்புரவாய் ஆசைதனைவிட்டொழித்தார்
வேணவே யானவர்க்குத்
தொண்டுசெய்து வெகுகாலம் வையகத்தில் இருந்தேன்யானும்
பூணவே பார்தனிலே வாசையற்று
புகழான சமாதிக்கு யேகினேனே
விளக்கவுரை :