போகர் சப்தகாண்டம் 4491 - 4495 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4491. தானான காலாங்கி சொன்னநீதி தப்பாமல் புலிப்பாணி மைந்தாகேளு
கோனான யெனதையர் கடாட்சத்தாலே கொற்றவனே ஆகாயப்புரவிகொண்டு
மானான லோகமெல்லாஞ் சுத்தியேதான் மகத்தான செம்புரவி கடிவாளேந்தி
தேனான சைனபதிதேசமல்லோ சிறப்புடனே யான்போறேனென்றிட்டாரே

விளக்கவுரை :


4492. இட்டாரே புலிப்பாணி மைந்தருக்கு யெழிலான வார்த்தையது மிகவுங்கூறி
சட்டமுடன் செம்புரவி மேலேயேறி தாரணியெல்லாஞ் சுத்திமகிமைபூண்டு
திட்டமுடன் சைனபதி தேசந்தன்னில் சிறப்புடனே செம்புரவி இறக்கினேன்யான்
மட்டவிழ் பூங்கோதையர்கள் எல்லாருந்தான் மார்க்கமுடன் எந்தனையே சூழ்ந்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

4493. சூழ்ந்தாரே சைனபதிபெண்களோடு சுத்தமுள்ள மாண்பர்களு மொன்றாய்கூடி
தாழ்ந்ததொரு ஆகாயபுரவிதன்னை சட்டமுடன் எல்லவரும் கண்டுஏங்கி
வாழ்ந்தோமே வையகத்தில் வெகுகாலந்தான் வன்மையுள்ள வதிசயங்கள் அனேகங்கண்டோம்
வீழ்ந்ததொரு ஆகாயந்தனிலிறங்கி விடுபுரவி மகிமையது கூறப்போமோ

விளக்கவுரை :


4494. கூறவென்றால் நாவில்லைப் பாவுமில்லை குவலயத்தில் பொற்புரவி புதுமையாவும்
மாறலுடன் வெகுகோடி வித்தைதானும் மன்னவனே போகர்முனி நாதர்நீயும்
தூறலன்றி எங்களுக்கு வதிதமார்க்கம் துப்புரவாய் வுபதேசம் செய்வீரல்லோ
சீரலது வாராமல் நாங்களுந்தான் சிறப்புடனே வுபதேசம் பெற்றோங்காணே 

விளக்கவுரை :


4495. காணவே யுபதேசம் அதிகங்கொண்டு கருத்துடனே சீனபதிவாழ்ந்திருந்தோம்
பூணவே வெகுதேச வதிசயங்கள் புகழாகத் தாமுரைப்பீர் எங்களுக்காய்
ஆணவமாம் அசுவமதின் மகிமைதன்னை வன்புடனே வையகத்தில் கண்டதில்லை
நீணவே வாகாயபுரவிதானும் நேர்மையுடன் கண்டதொரு மகிமைபாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4486 - 4490 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4486. நிறுத்தினேன் ஆகாயப்புரவிதன்னை நீதியுள்ள வசுவினியாந் தேவர்தானும்
கறுப்புடைய செம்புரவி போகநாதா கருவான குளிகைக்கு கரியுமாச்சோ 
துறுப்புநிகர் பலங்குறைந்து தோர்க்கலாச்சே துப்புரவாய்க் குளிகையது மேலதாச்சோ
பொறுப்புடைய பொன்னுலகப் புரவிமேலே புகழான சீனபதிமார்க்கந்தானே

விளக்கவுரை :


4487. மார்க்கமுடன் வசுவினியாந் தேவர்தானும் மகத்தான குளஇகைக்கு வாசீர்மந்தான்
தீர்க்கமுடன் தானுரைத்தார் தேவர்தானும் தீரமுடன் எந்தன்குளிகைக்கல்லோ
ஏர்க்கவே மெச்சிடவே ரிஷியார்தாமும் எழிலாக எந்தனுக்கு வசுவந்தன்னை
பார்க்கவே சீனபதிகொண்டுபோக பரமகுரு வசுவினியாம் விடைதந்தாரே

விளக்கவுரை :

[ads-post]

4488. விடையான தேவரது மொழியுங்கேட்டேன் வீரான புரவியது மகிமைகண்டேன்
நடையுடனே கசம்புரவி பறக்கும்வேகம் நாதாக்கள் ஒருவருந்தான்கண்டதில்லை
தடைதன்றி செம்புரவி யடியேன்தானும் தன்மையுடன் பேசுவது மகிமைகண்டேன்
படைமுகமாம் புரவியது செல்லும்வேகம் பாருலகில் சித்தர்களங் காணார்தாமே

விளக்கவுரை :


4489. காணாரே நாதாந்தசித்துதாமும் காசினியில் வெகுகோடி கண்டேன்யானும்
தோணாத மகிமையெல்லாம் யானும்கண்டு துப்புரவாய் யுலகுபதி சுத்திவந்தேன்
நீணவே யசுவினியாந் தேவர்தம்மால் நிட்களமாய் வினோதமதை யானுங்கண்டேன்
பூணவே யிதிகாச வித்தையெல்லாம் புகழாக வையகத்தில் கண்டிட்டேனே

விளக்கவுரை :


4490. கண்டேனே புலிப்பாணி மைந்தாகேளு காசினியில் அசுவினியாம் மகிமைவித்தை
விண்டிடவே சீனபதிதேசத்தார்க்கு விருப்பமுடன் உரைப்பதற்கு யானுஞ்சொல்வேன்
சண்டமாருதம்போன்ற புரவிதன்னை சட்டமுடன் சைனத்தார் காணவென்று
கொண்டுமேயான் போரேனப்பாகேளு குவலயத்தில் ஆச்சரிய மகிமைதானே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4481 - 4485 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4481. மதித்தாரே எந்தனையும் தேவர்தாமும் மார்க்கமுடன் எந்தன்மேல் பட்சம்வைத்து
துதித்தாரே காலாங்கி நாதர்தம்மை துப்புரவாய் அஞ்சலிகள் மிகவுஞ்செய்து
கதிப்பான சீனபதிவிட்டுநீரும் கண்மணியே யேன்வந்தீர் ஆசீர்மந்தான்
விதிப்புனக்கு இருந்துமல்லோ வந்தீரோதான் விருப்பமுடன் விதியகல வந்திட்டீரே

விளக்கவுரை :


4482. வந்ததொரு வரலாற்றைக் கூறுமென்று வண்மையுடன் தாமுரைத்தார் தேவர்தாமும்
சிந்தனையாய் கேட்குகையில் அடியேன்தானும் சிறப்புடனே வசுவினியாந் தேவருக்கு
சொந்தமுடன் தங்களது வாசீர்மந்தான் துப்புறவாய் காண்பதற்கு வந்ததென்று
இந்தமுடன் அடியேனும் பணிந்துமல்லோ வன்பாக வணங்கிட்டேன் பாதந்தானே

விளக்கவுரை :

[ads-post]

4483. பாதத்தை யான்வணங்கி பரமநாதா பாருலகில் குளிகைகொண்டு வந்தேன்யானும்
நீதமுடன் தங்களது வாசீர்மத்தில் நிலையான வசுவத்தின் மார்க்கந்தன்னை
தோதமுடன் காண்பதற்கு வந்தேன்யானும் தோற்றமுடன் பறக்கின்ற வசுவந்தன்னை
நீதமுடன் அடியேனுங் காணவென்று நீதியுடன் தம்பதிக்கு வருகலாச்சே

விளக்கவுரை :


4484. ஆச்சென்று சொல்லுகையில் அடியேன்தானும் வன்புடனே மனதுவந்து தேவர்தானும்
பாச்சலுடன் தன்பதியி லழைத்துக்கொண்டு பாங்கான குண்ணருகின் மேலேசென்று
வீச்சுடனே பறக்குகின்ற வசுவந்தன்னை விருப்பமுடன் எந்தனுக்குக் காண்பித்தார்பார்
மூச்சடங்கி குளிகையனைக் கையிலேந்தி மூர்க்கமுடன் புரவியின்மேல் ஏறினேனே

விளக்கவுரை :


4485. ஏறினேன் கானகத்தைச் சென்றுயானும் யெழிலான செம்புரவி கொண்டுமல்லோ
தூறினேன் ஆகாயமார்க்கமாக துப்புறவாய் வையகங்கள் எல்லாஞ்சுத்தி
மாறிடவே வசுவினியார் ஆசீர்மந்தான் மகத்தான வலசாரி இடசாரியாக
கூறியதோர் மொழிபடியே யடியேன்தானும் கொண்டுவந்து செம்புரவி நிறுத்தினேனே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4476 - 4480 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4476. செய்தாரே எந்தனுக்கு இதவுசொல்லி சிறப்புடனே வசுவினியாந்தேவருக்கு
பையவே காலாங்கிசீஷர்தாமும் பாருலகைகாண்பதற்கு பூபாலன்தான்
துய்யவே குளிகைகொண்டு சீனம்விட்டு துப்புரவோ மதுடையவாசீர்மந்தான்
வெய்யவே காண்பதற்கு வந்தாரென்று விருப்பமுடன் வசுவினிக்கு வுரைத்திட்டாரே

விளக்கவுரை :


4477. இட்டாரே எந்தனையும் சீஷவர்க்கம் எழிலான வசுவினியாந்தேவருக்கு
சட்டமுடன் தாமுரைத்தார் என்னைப்பற்றஇ தன்மையுள்ள வசுவினியார் தேவர்தானும்
வட்டமுடன் எனையழைத்து யாரென்றார்பார் வளமையுடன் காலாங்கி சீடனென்றேன்
கட்டமது வாராமல் அடியேனுக்கு கைவாகு செய்துமல்லோ வணைத்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

4478. அணைத்தாரே காலாங்கி சீடனப்பா அவனியெலாங் குளிகைகொண்டு பறந்தசித்தர்
கணப்பொழுது பூமிதனில் தங்காசித்து கைலாசம் பறக்குகின்ற கடிகைபாலா
சனப்பொழுது பூமிதனில் நிற்காவேந்தர் சாங்கமுடன் காலாங்கிக்குகந்த சீடர்
வணக்கமுடன் இணக்கமது கொண்டசித்தர் வண்மையுள்ள பாலகனே வாவென்றாரே

விளக்கவுரை :


4479. என்றுமே வசுவினியாந் தேவர்தானும் எழிலான எந்தனையுங் கொண்டனைத்து
குன்றான மகமேரே கோவேகேளும் குவலயத்தில் சித்தர்களுக்குகந்த சீடா
வென்றிடவே நாற்றிசையும் போற்றும்பாலா வேதாந்த தாய்தமக்கு உகந்தபாலா
தென்றிசையில் அகத்தியரும் மெச்சும்நாதா தெளிவான கண்மணியே என்றிட்டாரே

விளக்கவுரை :


4480. கண்ணான கண்மணியே போகநாதா கைலாச ரிஷிகள்முதல் மெச்சும்பாலா
விண்ணுலகில் நவகோடி ரிஷிகள்தம்மில் விருப்பமுடன் தேர்ந்தெடுத்த வினோதபாலா
தண்ணா சுடர்மணியே சூட்சாசூட்சம் தாரிணியில் கற்றறிந்த லோகநாதா
வண்ணமுடன் மேதினியில் கீர்த்திபெற்ற வைராக்கியம் போகரென்று மதித்திட்டாரே

விளக்கவுரை :


Powered by Blogger.