போகர் சப்தகாண்டம் 4551 - 4555 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4551. மூடினார் சீஷவர்க்க மாண்பரெல்லாம் மூதுலகைக் கண்டதொரு சித்துதாமும்
நீடியே வருவதற்கு முன்னதாக நிட்களங்கமானதொரு வாக்குதானும்
கூடியே நான்வருகுங்காலமப்பா கொற்றவனே அறுபத்து வாண்டுமாகும்
தேடியே நிங்களெல்லாஞ் சமாதிபக்கல் தேற்றமுடன் காத்திருக்க வென்றிட்டாரே

விளக்கவுரை :


4552. என்றுமே நான்வருகுங்காலந்தன்னில் எழிலான சப்பாணி நடப்பான்பாரு
குன்றின்மேல் மேயுகின்ற மிருகமெல்லாம் கொப்பெனவே வாய்ஞானம் மிகவேகூறும்
வென்றிடவே குருடனவன் கண்திறப்பான் வேதாந்தம் வூமையன் மிகவேசொல்வான்
நன்றான பட்சியது ஞானம்கூறும் நாதாந்த சித்துவருங் காலமாச்சே

விளக்கவுரை :

[ads-post]

4553. ஆச்சப்பா புலிபசுவு மொன்றாய்கூடி அடர்ந்ததொரு பொய்கைதனில் நீரையுண்ணும்
பாச்சலுடன் நரிவந்து கரியைவெல்லும் பாங்கான பரியதுவும் அரியைவெல்லும்
மேச்சலுடன் சந்திரனுங் கலைகள்மாறி மிக்கான நிலைதனிலே நிற்பான்பாரு
காச்சலுடன் கதிரோனுந் திசைகள்மாறி கண்ணுக்குத் தோற்றாமல் நிற்பான்பாரே

விளக்கவுரை :


4554. பாரேதான் காலாங்கி சொன்னநீதி பட்சமுடன் யிவ்வுலகில் மெய்யதாச்சு
நேரேதான் பூவுலகில் அப்பாகேளு நெடிதான பட்டமரந் துளித்துநிற்கும்  
சீரேதான் பிரளயங்கள் அதிகங்காணும் சிறப்பான சித்தரெல்லாம் முன்னேநிற்பார்
கூரான யிவ்வண்ண வதிசயங்கள் குவலயத்தில் நடக்குமென்று சொல்லிட்டாரே

விளக்கவுரை :


4555. சொல்லவே கிக்கிந்தாரிஷியார்தாமும் சுத்தமுடன் சித்துவருங்காலமாச்சு
வெல்லவே அறுபத்து வாண்டுமாச்சு வேதாந்த சித்துவருங்காலமாச்சு
புல்லவே சமாதியிட மாண்பரெல்லாம் புகழான சித்துமுனி கூட்டத்தோடும்
வல்லதொரு நாதாந்த முனிவர்தானும் வளமையுடன் சமாதிவிட்டு வருநாளாச்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4546 - 4550 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4546. ஏகுவேன் சமாதிக்கு சீஷவர்க்கம் எழிலான கிக்கிந்தா மலைக்குமேற்கு
ஆகுடனே சமாதியது தோண்டவென்று வன்புடனே சீஷருக்கு விடைகொடுக்க
பாருமொழிதவறாமல் சீஷவர்க்கம் பண்புடனே சென்றார்கள் மலையோரத்தில்
வேகுடனே சமாதியது கட்டவென்று வெளிப்பட்டுத் தான்தொடர்ந்தார் மாண்பர்தானே

விளக்கவுரை :


4547. மாண்பான சீடர்களுஞ் சமாதிகட்டி மார்க்கமுடன் கிக்கிந்தா ரிஷியாருக்கு
ஆண்பான சமாதியது கட்டியல்லோ அழகான பாறையது மேலேவைத்து
காண்பான ரிஷியாருக்கு முன்னேநின்று கர்த்தாவே கிக்கிந்தா மலைதான்சித்தே
நீண்பான சமாதியது முடிந்ததென்று நிஷ்டைவிட்டு வருகவென்று பணிந்திட்டாரே

விளக்கவுரை :

[ads-post]

4548. பணிந்துமே மாண்பரெல்லாம் தொழுகும்போது பட்சமுள்ள கிக்கிந்தா ரிஷியார்தாமும்
துணிந்துமே கிக்கிந்தா மலையைவிட்டு துப்புரவாய் வெகுஜனங்கள் பின்னடக்க
அணியணியாய் மாண்பர்களும் கூட்டத்தோடு வன்பான ரிஷியாரும் முன்னடக்க
கணிவுடனே கிக்கிந்தா மலைக்கு மேற்கே கர்த்தாவும் சமாதிபதி வந்திட்டாரே

விளக்கவுரை :


4549. வந்ததொரு ரிஷியாருஞ் சமாதிகண்டு வளமையுடன் மாண்பர்களை நோக்கங்கொண்டு
அந்தமுடன் அடியார்கள் தன்னைநோக்கி வன்புடனே மனதுவந்து வார்த்தைசொல்வார்
இந்ததொரு வையகத்தின் ஆசைவிட்டேன் யெழிலான சமாதிக்கு செல்வேனப்பா
சொந்தமுடன் பாறையது மூடியல்லோ சுத்தமுடன் காத்திருங்கள் என்றிட்டாரே

விளக்கவுரை :


4550. என்றுமே நாதாந்த சித்துதாமும் எழிலான சமாதிதனி லிரங்கும்போது 
குன்றான மகமேரே மாண்பரேகேள் குறிப்பான சமாதிதனிலிறங்கிறேன்யான்
வென்றிடவே பாறைகளை மூடவென்று வெழ்க்கமுடன் குருவாக்குகூறும்போது
அன்றுரைத்த மொழிபோலே மாண்பரெல்லாம் வன்பாகப்பாறைதனை மூடிட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4541 - 4545 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4541. தாமான சித்துமகா சொரூபரப்பா தாரணியில் வெகுகாலங் கடந்தசித்து
கோமான்கள் இருந்ததில்லை கொடியசித்து கொற்றவனே போகரிஷியறியமாட்டாய்
பூமானாம் உனதையர் காலாங்கிநாதர் புகழுடனே கண்டறிந்த சித்துவாகும் 
நாமாக வறிந்தபடி சொன்னேனப்பா நாட்டிலே யாரேனுஞ் சொல்லார்தாமே

விளக்கவுரை :


4542. சொல்லாரே கிக்கஇந்தா மலைதானுள்ளே சொரூபமென்ற சித்துமகா ரிஷியார்தாமும்
வெல்லவே வெகுகாலம் மலையின்மேலே வேழ்க்கையுடன் தாமருந்தார் ரிஷியார்தாமும்
புல்லவே சமாதிக்கு ஏகவென்று புகழான சீஷவர்க்கந் தன்னோடொக்க
அல்லல்படத்த வையகத்தில் ஆசைவிட்டு வன்புடனே தானெழுந்தார் ரிஷியார்தானே

விளக்கவுரை :

[ads-post]

4543. தானான கிக்கிந்தா ரிஷியார்தாமும் தகமையுடன் சீஷவர்க்கந்தன்னைநோக்கி
கோனான எனதையர் திருவேலரிஷியார் கொற்றவனாருத்தாரப்படியேதானும்
பானான சமாதிக்கு செல்வேனென்று பட்சமுடன் சீஷருக்குத்தாமுரைத்து
தேனான கிக்கிந்தா மலைக்குமேற்கே தீரமுடன் புறப்பட்டார் சித்துதாமே

விளக்கவுரை :


4544. சித்தான கிக்கிந்தா மலைதான்சித்து சிறப்பான சீடருக்குத் தாமுரைப்பார்
முத்தான திருவேலர் ரிஷியார்வாக்கு மூதுலகைக் கண்டதொரு ரிஷியார்தாமும்
எத்தனையோ வரைகோடிகாலமப்பா ஏற்றமுடன் வையகத்தில் இருந்தார்தானும்
பத்தியுடன் லோகமதில் இருந்துமேதான் பாருலகில் லாபமதைக் காணார்பாரே

விளக்கவுரை :


4545. காணாரே திருவேல ரிஷியார்தாமும் காசினியில் நாலுயுகமிருந்துமென்ன
தோணாத காயகற்பம் கொண்டுமென்ன துப்புரவாய் ஆசைதனைவிட்டொழித்தார்
வேணவே யானவர்க்குத் தொண்டுசெய்து வெகுகாலம் வையகத்தில் இருந்தேன்யானும்
பூணவே பார்தனிலே வாசையற்று புகழான சமாதிக்கு யேகினேனே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4536 - 4540 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4536. ஓதவே யடியேனுந்தாள்பணிந்து வுத்தமனார் திருவேல ரிஷியாருக்கு
நீதமுடன் கரங்குவித்து சிரம்பணிந்து நீட்சியுடன் வுத்தாரஞ்சொன்னேன்பாரு
போதமுடன் எந்தனையுங் கண்டதாலே புகழாக யுந்தனுக்குக் கிருபைசெய்வேன்
தோதமுடன் சிலகாலம் எந்தன்பக்கல் தோற்றமுடன் நீரிருந்தால் அருள்சொல்வேனே

விளக்கவுரை :


4537. சொல்வேனே லோகவதிசயங்களெல்லாம் சுருக்கமுடன் உந்தனுக்கு உபதேசித்தேன்
புல்லவே திருவேல ரிஷியார்தாமும் புகன்றிட்டாரெந்தனுக்கு வாக்குமல்லோ
வெல்லவே தசவருடம் யானுமங்கே வீரான கிக்கிந்தா மலைதானுள்ளே
வல்லதொரு சித்தருடன் கூடயானும் வளமாக வனந்தனிலே யிருந்தேன்பாரே

விளக்கவுரை :

[ads-post]

4538. பாரேதான் புலிப்பாணி மைந்தாகேளு பாங்கான காட்டகத்தே சித்தர்கூட
நேரேதான் யானுமது வாசம்பூண்டு நெடுங்கால மங்கிருந்தேன் காட்டகத்தே
சீரேதான் சீஷருடன்கொண்டுசென்று சிறப்பாக விருக்கையிலே ரிஷியார்தாமும்
பேரேதான் கூப்பிட்டு திருவேலர்தாமும் பேரான மகிமைதனைக்கூறினாரே

விளக்கவுரை :


4539. கூறினார் கிக்கிந்தா மலைதானுள்ளே கூறானகதவுமுண்டு மலைதான்பக்கல்
மாரிடவே ரிஷியாருஞ் சமாதிபூண்டு மகத்தான சமாதியது சொல்லொண்ணாது
நீறியதோர் கண்ணக்கூடமப்பா நிலையான சமாதியிதில் சென்றாயானால்
தேரிடவே கிக்கிந்தாரிஷிதானப்பா செயலான சமாதிக்குள் இருப்பார்காணே

விளக்கவுரை :


4540. காணவே நாலுயுகங் கண்டசித்து கருவான பிரளயத்தில் மிதந்தசித்து
பூணவே லோகமது முடிவுதன்னில் பொங்கமுடன் ஆலிலையைக்கடந்தசித்து
தோணவே யாதாமின் யோவான்தன்னை தோறாமல் கண்டறிந்த சித்துவாகும்
நீணவே பிரளயங்கள் வந்தபின்பு நிலையாகி நின்றதொரு சித்துதாமே

விளக்கவுரை :


Powered by Blogger.