போகர் சப்தகாண்டம் 4566 - 4570 of 7000 பாடல்கள்
4566. கண்டாரே ரெண்டாங்கால்
சுனையிலப்பா கருவாக போகரிஷிமுனிவர்தானும்
கண்டாரே படுமுதலை
சுனையிலப்பா கருவாக சுந்தரமூர்த்திதன்னால்
கண்டாரே வந்ததொரு முதலையப்பா
கனமுடனே மதலைதனைவிழுங்கிவிட்ட
கண்டாரே
முதலைதனைபார்த்துமல்லோ கனத்ததொரு விசாரமது கொண்டிட்டாரே
விளக்கவுரை :
4567. கொண்டதொரு போகரிஷிநாதர்தம்மை
குன்றான மலைதனிலே இருக்குஞ் சித்தர்
கண்டுமே போகரிஷிநாதர்பக்கல்
கனமுடனே சித்தர்முனி கூட்டமெல்லாம்
மண்டலத்தில் காணாதவதிசயங்கள்
மகத்தான மலைமீதிற் கண்டோமென்று
விண்டுமே தங்கள் தங்கள்
மனதிலெண்ணி விருப்பமுடன் போகர்பக்கல் வந்திட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
4568. வந்துமே போகரிஷி
பக்கல்நின்று மகத்தான முனிக்கூட்டம் தேவர்கூட்டம்
அந்தமுடன் ஆயிரம்பேர்
வோடிவந்து ஆங்கார கோபமது சிகரமிஞ்சி
இந்ததொரு மலைமீதில்
வந்தபாலன் எழிலான வரலாற்றை அறிவோமென்று
சிந்தனையா யத்திரள்கூட்டம்
படைகளோடு தீர்த்தமுடன் போகர்பக்கல் வந்தார்தானே
விளக்கவுரை :
4569. தானான போகரிஷிநாதர்தம்மை
தண்மையுள்ள சிறுபாலா யாரென்றார்கள்
கோனான காலாங்கி நாதர்தம்மை
கொற்றவனார் போகரிஷிக்கனைத்துமல்லோ
பானான யென்குருவே எந்தன்நாதா
பட்சமுடன் இவ்வேளைப் பாதுகாத்து
தேனான மனோன்மணியாள்
கடாட்சந்தன்னால் தேர்வேந்தரெந்தனையும் ரட்சிப்பீரே
விளக்கவுரை :
4570. இரட்சித்துக் காத்தருள
வேண்டுமென்றும் யியலான போகரிஷிவணங்கியல்லோ
பரமவொளி கைலங்கிரி நாதாபோதா
பாருலகில் உன்னைவிட சித்துமில்லை
நிரந்தரமாய் நிரைந்த பராபரமே
போற்றி நிட்களங்கமானதொரு நிதியேபோற்றி
வரந்தந்து எந்தனையுங்
கார்க்கவென்று வாகுடனே போகரிஷி பணிந்திட்டாரே
விளக்கவுரை :