போகர் சப்தகாண்டம் 4606 - 4610 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4606. என்றுமே போகரிஷிமுனிவர்தம்மை எழிலான நாதாந்தசித்துதாமும்
சென்றுமே சமாதிதனை மூடவென்று சினத்திலே போகருக்கு விடையுஞ்சொல்ல
நன்றுடனே போகரிஷிமுனிவர்தானும் நாதாந்த சித்தொளிவைக் கெதியேதென்றார்
குன்றுடைய காலாங்கிசீஷருக்கு கூறுவார் சித்தொளிவுங் கூறுவாரே

விளக்கவுரை :


4607. கூறுவார் காலாங்கி சீஷவர்கேளும் கொற்றவனே சீனபதிவிட்டுநீயும்
மாறலென்ற குளிகையது பூண்டுகொண்டு மகத்தான கிக்கிந்தா மலையைத்தேடி
சாரலென்ற மேற்பதியில் வந்துநீயும் சட்டமுடன் சமாதிதனைக் கண்டுமேதான்
சேரவே எந்தனைநீபார்த்ததாலே செப்பமுடன் உந்தனுக்கு வருள்சொல்வேனே

விளக்கவுரை :

[ads-post]

4608. அருளான மகிமையது என்னவென்றால் வப்பனே காலாங்கிசீஷர்கேளும்
பொருளான மூன்றுயுகங் கடந்துபோச்சு பொங்கமுடன் கலியுகமும் பிறக்கலாச்சு
இருளான கலியிகத்தின்முடிவுதன்னில் எழிலாக எந்தனைநீகாண்பாயானால்
தெருளகற்றியுந்தனுக்கு வனேகபோதம் தெளிவான கிரிகைகளும் செப்புவேனே

விளக்கவுரை :


4609. செப்புவே னுந்தனுக்கு யென்றுசொல்லி தேற்றமுடன் தாமுரைப்பார் சித்துதாமும்
ஒப்பமுடன் போகரிஷிநாதருக்கு ஓகோகோ நாதாந்த சித்துதாமும்
இப்புவியிலதிசயங்கள் யாவுங்கூறி யெழிலாகத்தாமுரைத்துபோகருக்கு
எப்போதும் போலாக சமாதிதன்னை எழிலாக மூடவென்று விடைதந்தாரே  

விளக்கவுரை :


4610. தந்தாரே விடையதுவும் பெற்றுக்கொண்டு தகமையுள்ள திருவேல ரிஷியார்முன்னே
அந்தமுடன் போகரிஷிமுனிவர்தானும் வன்பாக மலைமீதிற்சென்றுமல்லோ
சொந்தமுடன் திருவேல ரிஷியார்பக்கல் தோற்றமுடன் போகரிஷிமுனிவர்தானும்
விந்தையது பெற்றமல்லோ ரிஷியார்பக்கல் விருப்பமுடன் சிரங்குனிந்து நின்றிட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4601 - 4605 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4601. வணங்கியே யடிவார சமாதிதன்னில் வண்மையுடன் போகரிஷிமுனிவர்தானும்
இணங்கியே கரங்குவித்து நிற்கும்போது எழிலான சமாதியது திறந்துதங்கே
மணமுடைய சொரூபமென்ற சித்துதாமும் மகத்தான ரிஷியாருங் கண்திறந்து
சுணங்கமது வாராமல் போகர்தம்மை சுத்தமுடன் வாய்திறந்து கேட்டிட்டாரே

விளக்கவுரை :


4602. கேட்டதொரு ரிஷியார்க்கு மனதுவந்து கிருபையுடன் காலாங்கி சிஷனென்றார்
நாட்டமுடன் போகரிஷிநாதர்தம்மை நாதாந்த சித்தொளிவு ரிஷியார்தாமும்
தேட்டமுடன் திரிசங்கு அயோத்திமைந்தன் திகழான வரிச்சந்திரன் சுகமோவென்றார்
வாட்டமுடன் போகரிஷிமுனிவர்தானும் வுளமுடனே யான்கண்டதிலையென்றாரே

விளக்கவுரை :

[ads-post]

4603. என்றாரே போகரிஷிமுனிவர்தானும் எழிலான திரிச்சங்கு மைந்தன்தன்னை
குன்றான மலையிறங்கி குளிகைபூண்டு குவலயத்தையான்சுத்தி வருகும்போது
தென்திசையில் திருப்பாலின் கடலின்மேற்கே திகழான மயானமென்ற கரையில்தானும்
தன்றுணவ கிருஷ்ணனைப்போல் கல்லாய்த்தானும் திரிணியில் கண்டேனே யென்றிட்டாரே

விளக்கவுரை :


4604. இட்டாரே போகரிஷிமுனிவர்தானும் எழிலான வரிச்சந்திரன் தன்னைத்தானும்
பட்டதொரு மாண்பர்களின் கடலைதன்னில் பாங்குடனே காவலது இருக்கவென்று
கட்டதொரு மாண்பருக்குக் கூலியாளாய் சுடலைபதி கார்த்திருக்கக் கண்டேன்யானும்
கட்டவிழும் சத்தியத்துக் காளதாகி காசினியில் சுடலைபதி யிருந்திட்டாரே

விளக்கவுரை :


4605. இருந்தாரே கல்லாகவெகுகோடிகாலம் எழிலான திருச்சங்கு மைந்தன்தானும்
பொருந்தவே கல்லயனைக்கண்டேன் என்று பொன்னடிக்குத் தண்டனிட்டார் போகர்தாமும்
திருந்தவே சமாதிகளிலிருந்தசித்து தீர்க்கமுடன் கலுயுகமும் பிறந்ததென்ன
குருந்தமுடன் சீனபதி துரைத்தனங்கக் குவலயத்தில் அமைத்துதோ தானென்றிட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4596 - 4600 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4596. ஆச்சப்பா போகரிஷிநாதாகேளும் வன்புடனே உந்தனுக்கு வருளுஞ்சொல்வேன்
மூச்சடங்கிப்போனதொரு வெகுகோடிசித்து முசியாமல் மலையடிவாரந்தன்னில்
மாச்சலுடன் சமாதினில் வெகுபேர்களுண்டு மகத்தான நாதாக்கள் சொல்லொண்ணாது
ஆச்சரியமானசித்து வனேகங்கோடி அடிவாரம் மலைதனிலே காணலாமே

விளக்கவுரை :


4598. காணலாம் போகரிஷிமைந்தாநீயும் கண்டாலோ சித்துசாபமெய்தும்
தோணவே சாபமது வந்திட்டாலும் தோற்றமுடன் எந்தனையும் நினைப்பீரானால்
வேணவதாருவுபகாரமுந்தனுக்கு விருப்பமுடன் செய்வதற்கு ஐயமில்லை
பூணவே யுந்தனுக்கு சாபம்நீக்கி பொங்கமுடன் வரந்தருவேன் என்பார்பாரே

விளக்கவுரை :

[ads-post]

4598. பாரேதான் காலாங்கிசீஷபாதா பரிவுடைய எந்தனிருகண்ணிவேலா
சீரேதான் ஆகாயகுளிகைகொண்ட சிறப்புடனே கற்பமுண்ட மாயதூபா
கேரேதான் உந்தனுக்கோ வொருவருண்டோ நேரான குளிகைகொண்ட நேயபாலா
வீரேதான் சீனபதிவிட்டமாண்பர் வீரான பொன்மணியே என்றிட்டாரே

விளக்கவுரை :


4599. என்றுமே திருவேலர் சொல்லும்போது எழிலான போகரிஷிநாதர்தானும்
குன்றான பருவத்தின்மேலேசென்று கோடான கோடிமனுமகிமைகண்டு 
தென்திசையில் கும்பமுனி மலையுங்கண்டு தேற்றமுடன் குளிகையது கொண்டுசென்று
வென்றிடவே மலையடியாம் வாரந்தன்னில் மேன்மையுடன் போகரவர் இறங்கினாரே

விளக்கவுரை :


4600. இறங்கியே போகரிஷிமனதுவந்து எழிலான சமாதிபதிதன்னிற்சென்று
அறமதுவும் வழுவாமல் முனிவர்தாமும் வன்புடனே சமாதியர்ச்சனையுஞ்செய்து
திறமுடைய காலாங்கிதனைநினைந்து தீர்க்கமுடன் சமாதிதனில் முன்னேநின்று
குறலகற்றி முனியாருங் கைகுவித்து கோலமுடன் சமாதிதனை வணங்கிட்டாரே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 4591 - 4595 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4591. பணிந்துமே எந்தனைத்தான் காண்பீரானால் பாருலகில் மகுத்துவங்கள் யானுரைப்பேன்
துணிந்துமே முதலையது தானுரைக்க துரைமன்னரானதொரு போகர்தானும்
அணியுடனே திருவேலர் தேவஸ்தானம் வன்புடனே பதாம்புயத்தை நண்ணுதற்கு
மணிபோன்ற கிக்கிந்தா மலையினுள்ள மகத்துவமாங் கடிஸ்தலத்தை நண்ணினானே

விளக்கவுரை :


4592. நண்ணியே காலாங்கிநாதர்தாமும் நலமுடனே சித்தொளிவை மனதிலெண்ணி
அண்ணலார் பதாம்புயத்தைக் காணுதற்கு வன்பான போகரிஷி சென்றாரங்கே
வண்ணமுடன் திருவேலரிஷியார்தாமும் வளமுடனே போகரிஷிதன்னைப்பார்த்து
நண்ணியே போகரிஷிநாதர்தம்மை நலமுடனே யாரென்று வினவினாரே

விளக்கவுரை :

[ads-post]

4593. வினவியே திருவேலரிஷியார்தம்மை விருப்பமுடன் யாரென்றுகேட்கும்போது
கனமுடனே காலாங்கிநாதர்தம்மை கருத்துடைய நற்சீஷனென்று சொன்னார்
தினகரன்போல் முகத்தொளிவைக் கண்ணிற்கொண்டு தீர்க்கமுடன் திருவேலரிஷியார்தாமும்
மனதுவந்து வந்தெனக்கு வாசீர்மங்கள் வண்மையுடன் தானுரைப்பார் வேலர்தாமே

விளக்கவுரை :


4594. தானான திருவேல ரிஷியார்தாமும் தகமையுடன் தாமுரைப்பார்போகருக்கு
வேனான விட்டகுறையிருந்ததாலே விடுபட்டு வந்தீர்காண் மலையைத்தேடி
கோனான காலாங்கிகிருபையாலே கொற்றவனே எந்தனுக்கு வாய்த்துதல்லோ
தேனான திருவினையாள் மனோன்மணியாள்தானும் சிகரமது வுச்சிமலையறியார்காணே

விளக்கவுரை :


4595. காணவே மனோன்மணியாள் பார்த்ததில்லை கைலாசதிருவேலர் மலையினுச்சி
நீணவே செய்ததவத்தினாலே நீதியுடன் மலைதனையே காணலாச்சு
வேணதொரு மகத்துவங்கள் அறியலாச்சு வேதாந்த சின்மயத்தின் பொருளுங்கண்டீர்
வாணர்முதல் மதலைதனைக் கண்டதில்லை வண்மையுடன் வுந்தனுக்குக் காணலாச்சே

விளக்கவுரை :


Powered by Blogger.