4596. ஆச்சப்பா போகரிஷிநாதாகேளும்
வன்புடனே உந்தனுக்கு வருளுஞ்சொல்வேன்
மூச்சடங்கிப்போனதொரு
வெகுகோடிசித்து முசியாமல் மலையடிவாரந்தன்னில்
மாச்சலுடன் சமாதினில்
வெகுபேர்களுண்டு மகத்தான நாதாக்கள் சொல்லொண்ணாது
ஆச்சரியமானசித்து வனேகங்கோடி
அடிவாரம் மலைதனிலே காணலாமே
விளக்கவுரை :
4598. காணலாம் போகரிஷிமைந்தாநீயும் கண்டாலோ சித்துசாபமெய்தும்
தோணவே சாபமது வந்திட்டாலும்
தோற்றமுடன் எந்தனையும் நினைப்பீரானால்
வேணவதாருவுபகாரமுந்தனுக்கு
விருப்பமுடன் செய்வதற்கு ஐயமில்லை
பூணவே யுந்தனுக்கு
சாபம்நீக்கி பொங்கமுடன் வரந்தருவேன் என்பார்பாரே
விளக்கவுரை :
[ads-post]
4598. பாரேதான் காலாங்கிசீஷபாதா பரிவுடைய
எந்தனிருகண்ணிவேலா
சீரேதான் ஆகாயகுளிகைகொண்ட
சிறப்புடனே கற்பமுண்ட மாயதூபா
கேரேதான் உந்தனுக்கோ
வொருவருண்டோ நேரான குளிகைகொண்ட நேயபாலா
வீரேதான் சீனபதிவிட்டமாண்பர்
வீரான பொன்மணியே என்றிட்டாரே
விளக்கவுரை :
4599. என்றுமே திருவேலர்
சொல்லும்போது எழிலான போகரிஷிநாதர்தானும்
குன்றான
பருவத்தின்மேலேசென்று கோடான கோடிமனுமகிமைகண்டு
தென்திசையில் கும்பமுனி
மலையுங்கண்டு தேற்றமுடன் குளிகையது கொண்டுசென்று
வென்றிடவே மலையடியாம்
வாரந்தன்னில் மேன்மையுடன் போகரவர் இறங்கினாரே
விளக்கவுரை :
4600. இறங்கியே போகரிஷிமனதுவந்து
எழிலான சமாதிபதிதன்னிற்சென்று
அறமதுவும் வழுவாமல்
முனிவர்தாமும் வன்புடனே சமாதியர்ச்சனையுஞ்செய்து
திறமுடைய
காலாங்கிதனைநினைந்து தீர்க்கமுடன் சமாதிதனில் முன்னேநின்று
குறலகற்றி முனியாருங்
கைகுவித்து கோலமுடன் சமாதிதனை வணங்கிட்டாரே
விளக்கவுரை :