போகர் சப்தகாண்டம் 4591 - 4595 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 4591 - 4595 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

4591. பணிந்துமே எந்தனைத்தான் காண்பீரானால் பாருலகில் மகுத்துவங்கள் யானுரைப்பேன்
துணிந்துமே முதலையது தானுரைக்க துரைமன்னரானதொரு போகர்தானும்
அணியுடனே திருவேலர் தேவஸ்தானம் வன்புடனே பதாம்புயத்தை நண்ணுதற்கு
மணிபோன்ற கிக்கிந்தா மலையினுள்ள மகத்துவமாங் கடிஸ்தலத்தை நண்ணினானே

விளக்கவுரை :


4592. நண்ணியே காலாங்கிநாதர்தாமும் நலமுடனே சித்தொளிவை மனதிலெண்ணி
அண்ணலார் பதாம்புயத்தைக் காணுதற்கு வன்பான போகரிஷி சென்றாரங்கே
வண்ணமுடன் திருவேலரிஷியார்தாமும் வளமுடனே போகரிஷிதன்னைப்பார்த்து
நண்ணியே போகரிஷிநாதர்தம்மை நலமுடனே யாரென்று வினவினாரே

விளக்கவுரை :

[ads-post]

4593. வினவியே திருவேலரிஷியார்தம்மை விருப்பமுடன் யாரென்றுகேட்கும்போது
கனமுடனே காலாங்கிநாதர்தம்மை கருத்துடைய நற்சீஷனென்று சொன்னார்
தினகரன்போல் முகத்தொளிவைக் கண்ணிற்கொண்டு தீர்க்கமுடன் திருவேலரிஷியார்தாமும்
மனதுவந்து வந்தெனக்கு வாசீர்மங்கள் வண்மையுடன் தானுரைப்பார் வேலர்தாமே

விளக்கவுரை :


4594. தானான திருவேல ரிஷியார்தாமும் தகமையுடன் தாமுரைப்பார்போகருக்கு
வேனான விட்டகுறையிருந்ததாலே விடுபட்டு வந்தீர்காண் மலையைத்தேடி
கோனான காலாங்கிகிருபையாலே கொற்றவனே எந்தனுக்கு வாய்த்துதல்லோ
தேனான திருவினையாள் மனோன்மணியாள்தானும் சிகரமது வுச்சிமலையறியார்காணே

விளக்கவுரை :


4595. காணவே மனோன்மணியாள் பார்த்ததில்லை கைலாசதிருவேலர் மலையினுச்சி
நீணவே செய்ததவத்தினாலே நீதியுடன் மலைதனையே காணலாச்சு
வேணதொரு மகத்துவங்கள் அறியலாச்சு வேதாந்த சின்மயத்தின் பொருளுங்கண்டீர்
வாணர்முதல் மதலைதனைக் கண்டதில்லை வண்மையுடன் வுந்தனுக்குக் காணலாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar