4601. வணங்கியே யடிவார
சமாதிதன்னில் வண்மையுடன் போகரிஷிமுனிவர்தானும்
இணங்கியே கரங்குவித்து
நிற்கும்போது எழிலான சமாதியது திறந்துதங்கே
மணமுடைய சொரூபமென்ற
சித்துதாமும் மகத்தான ரிஷியாருங் கண்திறந்து
சுணங்கமது வாராமல்
போகர்தம்மை சுத்தமுடன் வாய்திறந்து கேட்டிட்டாரே
விளக்கவுரை :
4602. கேட்டதொரு ரிஷியார்க்கு
மனதுவந்து கிருபையுடன் காலாங்கி சிஷனென்றார்
நாட்டமுடன்
போகரிஷிநாதர்தம்மை நாதாந்த சித்தொளிவு ரிஷியார்தாமும்
தேட்டமுடன் திரிசங்கு
அயோத்திமைந்தன் திகழான வரிச்சந்திரன் சுகமோவென்றார்
வாட்டமுடன்
போகரிஷிமுனிவர்தானும் வுளமுடனே யான்கண்டதிலையென்றாரே
விளக்கவுரை :
[ads-post]
4603. என்றாரே
போகரிஷிமுனிவர்தானும் எழிலான திரிச்சங்கு மைந்தன்தன்னை
குன்றான மலையிறங்கி
குளிகைபூண்டு குவலயத்தையான்சுத்தி வருகும்போது
தென்திசையில் திருப்பாலின்
கடலின்மேற்கே திகழான மயானமென்ற கரையில்தானும்
தன்றுணவ கிருஷ்ணனைப்போல்
கல்லாய்த்தானும் திரிணியில் கண்டேனே யென்றிட்டாரே
விளக்கவுரை :
4604. இட்டாரே
போகரிஷிமுனிவர்தானும் எழிலான வரிச்சந்திரன் தன்னைத்தானும்
பட்டதொரு மாண்பர்களின்
கடலைதன்னில் பாங்குடனே காவலது இருக்கவென்று
கட்டதொரு மாண்பருக்குக்
கூலியாளாய் சுடலைபதி கார்த்திருக்கக் கண்டேன்யானும்
கட்டவிழும் சத்தியத்துக்
காளதாகி காசினியில் சுடலைபதி யிருந்திட்டாரே
விளக்கவுரை :
4605. இருந்தாரே
கல்லாகவெகுகோடிகாலம் எழிலான திருச்சங்கு மைந்தன்தானும்
பொருந்தவே கல்லயனைக்கண்டேன்
என்று பொன்னடிக்குத் தண்டனிட்டார் போகர்தாமும்
திருந்தவே
சமாதிகளிலிருந்தசித்து தீர்க்கமுடன் கலுயுகமும் பிறந்ததென்ன
குருந்தமுடன் சீனபதி
துரைத்தனங்கக் குவலயத்தில் அமைத்துதோ தானென்றிட்டாரே
விளக்கவுரை :