சிவவாக்கியம் 11 - 15 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

11. அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.

விளக்கவுரை :

12. கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.

விளக்கவுரை :

[ads-post]

13. நானதேது? நீயதேது? நடுவில்நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புரம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
விளக்கவுரை :

யோக நிலை

14. சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே!
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ?
மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லீரேல்
சாத்திரப்பைநோய்கள் ஏது? சத்திமுத்தி சித்தியே!

விளக்கவுரை :

15. நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர்.
பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்!
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே.

விளக்கவுரை :


சிவவாக்கியம் 6 - 10 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

தேகநிலை

6. வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனே
நடுவன்வந்து அழைத்தபோது நாறும்இந்த நல்லுடல்
சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பாரே.

விளக்கவுரை :

ஞான நிலை

7. என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்தது இல்லையே
என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ?
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.

விளக்கவுரை :

[ads-post]

8. நினைப்பதொன்று கண்டிலேன் நீயலாது வேறிலை,
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ?
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே.

விளக்கவுரை :

9. மண்ணும்நீ அவ்விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ;
எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ;
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ-
நண்ணும்நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்.

விளக்கவுரை :

10. அரியும்அல்ல அயனும்அல்ல அப்புறத்தில் அப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 1 - 5 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

காப்பு

1. அரியதோர் நமச்சிவாயம் ஆதியந்தம் ஆனதும்
ஆறிரண்டு நூறுதேவர் அன்றுரைத்த மந்திரம்
சுரியதோர் எழுத்தைஉன்னிச் சொல்லுவேன் சிவவாக்கியம்
தோஷதோஷ பாவமாயை தூரதூர ஓடவே.

விளக்கவுரை :

2. கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
கலைகள்நூல்கள் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஓதிடும் பிழைபொறுக்க வேண்டுமே.

விளக்கவுரை :

[ads-post]

அக்ஷர நிலை

3. ஆனஅஞ் செழுத்துளே அண்டமும் அகண்டமும்
ஆனஅஞ் செழுத்துளே ஆதியான மூவரும்
ஆனஅஞ் செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆனஅஞ் செழுத்துளே அடங்கலாவ லுற்றதே.

விளக்கவுரை :

சரியை விலக்கல்

4. ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.

விளக்கவுரை :

யோக நிலை

5. உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்றவல்லீரேல்
விருத்தரரும் பாலராவீர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர்பாதம் அம்மைபாதம் உண்மையே.

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம் 6996 - 7000 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6996. பாரமாம் எந்நூலிற் துகளுண்டானால் பாலகனே சிக்கறுத்து மனங்களித்து
தூரான வார்த்தையது மிகக்கொள்ளாமல் துப்புரவாய்ச் செந்தமிழைச் சீர்திருத்தி
கூறான விதிபாடு முறைபாடோடு குணபாடு வழிபாடு தானமர்த்தி
சீறான போகரேழாயிரத்தை சிறப்புடனே யுகந்துமனங் கொள்வீர்தாமே

விளக்கவுரை :


6997. தாமான சித்துமுனி ரிஷியார்முன்னே தகமையுடன் பாடிவைத்த சத்தகாண்டம்
ஆமேதான் பசுபசுங்கிள்ளைமுன்னே வப்பனே யருங்காக்கை சத்தம்போலும்
வேமேதான் செந்தமிழாற் சித்தர்முன்னே வேட்கையுடன் யான்செய்த சத்தகாண்டம்
தாமேதான் புல்லறிவா லுரைத்ததாலே தண்மையுடன் பெரியோர் புன்னகையுமாமே

விளக்கவுரை :

[ads-post]

6998. நகையான போகரேழாயிரந்தான் நலமான சித்தர்முனி நாதருக்கு
தகமையுள்ள காண்டமது பெருமையோசொல் தாரணியில் அனேகம்பேர் சித்தர்கூடி
குகைதனிலே வெகுநூல்கள் பாடியல்லோ கொற்றவனே சமாதிமுகம் வைத்தாரப்பா
வகையான சாத்திரத்துக் கொப்புசொல்ல வல்லவனே எந்நாளும் முடியாதன்றே

விளக்கவுரை :


6999. அன்றான ஆதிசேடன் தன்னினாலும் வப்பனே வினவிடவும் போகாதப்பா
குன்றான மலைபோலே சாத்திரங்கள் கொட்டினார் சித்தரெல்லாம் லக்கோயில்லை
வென்றிடவே கும்பமுனி வர்க்கத்தோரும் வேதாந்த திருமூல வர்க்கத்தோரும்
நன்றாகப் பாடிவைத்தார் கோடிநூல்கள் நலமாகப் பாடிவைத்தேன் இந்நூலாமே

விளக்கவுரை :


7000. சின்னூலாம் என்றதொரு இந்தநூலை சினமதுவுங் கொள்ளாமல் மனதுவந்து
பன்னூலும் பெருநூலாயிருந்திட்டாலும் பட்சமுடன் மனங்களித்து வாசீர்மித்து
என்னூலைக் குற்றமது கூறாமற்றான் எழிலான சிறியேன்மேல் அன்புகூர்ந்து
நன்னூலா யிதம்பூண்டு யின்னூல்தன்னை நன்மையுடன் அனுசரித்து கொள்ளநன்றே

விளக்கவுரை :


7001. கொள்ளவே போகரேழாயிரந்தான் கொற்றவனே நெடுங்காலந் தவமிருந்து
உள்ளபடி யுடல்பொருள்கள் ஆவியெல்லாம் வுத்தமனே இந்நூலுக்கொப்பிவைத்தேன்
கள்ளமிலா சாத்திரமாம் சத்தகாண்டம் கலியுகத்தார் தான்பிழைக்க பாடிவைத்தேன்
உள்ளபடி சாபமது இந்நூற்கில்லை வுத்தமனே காண்டமது யேழுதானே

விளக்கவுரை :


7002. தானான காண்டமது ஏழுக்குள்ளே சதகோடி சூரியன்போல் மகத்துவங்கள்
கோனான காலாங்கி கடாட்சத்தாலே கொற்றவனே பெருநூலாம் குருநூலாக
தேனான மனோன்மணியாள் கிருபையாலும் தேஜொளிவின் சின்மயத்தின் அருளினாலும்
மானான போகரேழாயிரந்தான் மார்க்கமுடன் பெருநூலும் முற்றதாமே

விளக்கவுரை :



Powered by Blogger.