11.
அந்திமாலை உச்சிமூன்றும்
ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே.
விளக்கவுரை :
12.
கதாவுபஞ்ச பாதகங்க
ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராமஎன்னும் நாமமே.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
13.
நானதேது? நீயதேது? நடுவில்நின்றது
ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும்
குலாமரே!
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில்
அப்புரம்
ஈனதேது? ராமராம ராமஎன்ற நாமமே!
விளக்கவுரை :
யோக நிலை
14.
சாத்திரங்கள் ஓதுகின்ற
சட்டநாத பட்டரே!
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ?
மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லீரேல்
சாத்திரப்பைநோய்கள் ஏது? சத்திமுத்தி
சித்தியே!
விளக்கவுரை :
15.
நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம்
அறிகிலீர்.
பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்!
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே.
விளக்கவுரை :