தேகநிலை
6.
வடிவுகண்டு கொண்டபெண்ணை
மற்றொருவன் நத்தினால்
விடுவனோ அவனைமுன்னம் வெட்டவேணும் என்பனே
நடுவன்வந்து அழைத்தபோது நாறும்இந்த நல்லுடல்
சுடலைமட்டும் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பாரே.
விளக்கவுரை :
ஞான நிலை
7.
என்னிலே இருந்தஒன்றை
யான்அறிந்தது இல்லையே
என்னிலே இருந்தஒன்றை யான்அறிந்து கொண்டபின்
என்னிலே இருந்தஒன்றை யாவர்காண வல்லரோ?
என்னிலே இருந்திருந்து யான்உணர்ந்து கொண்டனே.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
8.
நினைப்பதொன்று கண்டிலேன்
நீயலாது வேறிலை,
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாயை மாயையோ?
அனைத்துமாய் அகண்டமாய் அனாதிமுன் அனாதியாய்
எனக்குள்நீ உனக்குள்நான் இருக்குமாற தெங்ஙனே.
விளக்கவுரை :
9.
மண்ணும்நீ அவ்விண்ணும்நீ
மறிகடல்கள் ஏழும்நீ;
எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்தபண் எழுத்தும்நீ;
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ-
நண்ணும்நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய்.
விளக்கவுரை :
10.
அரியும்அல்ல அயனும்அல்ல
அப்புறத்தில் அப்புறம்
கருமைசெம்மை வெண்மையைக் கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்
துரியமும் கடந்துநின்ற தூரதூர தூரமே.
விளக்கவுரை :