16.
வித்தில்லாத சம்பிரதாயம்
மேலும்இல்லை கீழுமில்லை
தச்சில்லாது மாளிகை சமைந்தவாறும் அதெங்ஙனே?
பெற்றதாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்!
சித்தில்லாத போதுசீவன் இல்லைஇல்லை இல்லையே.
விளக்கவுரை :
17.
அஞ்சும்மூணும் எட்டாதாய்
அநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச் செபிப்பீரேல்
பஞ்சமான பாதகங்கள் நூறுகோடி செய்யினும்
பஞ்சுபோல் பறக்கும்என்று நான்மறைகள் பன்னுமே.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
18.
அண்டவாசல் ஆயிரம்
பிரசண்டவாசல் ஆயிரம்
ஆறிரண்டு நூறுகோடி யானவாசல் ஆயிரம்
இந்தவாசல் ஏழைவாசல் ஏகபோக மானதாய்
எம்பிரான் இருக்கும்வாசல் யாவர்காண வல்லரே?
விளக்கவுரை :
19.
சாமம் நாலு வேதமும் சகல
சாத்திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன்எங்கள் ஈசனே!
விளக்கவுரை :
20.
சங்கிரண்டு தாரை ஒன்று
சன்னபின்னல் ஆகையால்
மங்கிமாளு தேஉலகில் மானிடங்கள் எத்தனை?
சங்கிரண்டை யும்தவிர்த்து தாரை ஊதவல்லீரேல்
கொங்கைமங்கை பங்கரோடு கூடிவாழல் ஆகுமே.
விளக்கவுரை :