21.
அஞ்செழுத்தி லேபிறந்து
அவ்வஞ்செழுத்தி லேவளர்ந்து
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்.
அஞ்செழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லீரேல்!
அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே!
விளக்கவுரை :
22.
அஞ்சும்அஞ்சும் அஞ்சுமே
அனாதியானது அஞ்சுமே!
பிஞ்சுபிஞ்சது அல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்!
நெஞ்சில்அஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க வல்லீரேல்
அஞ்சும்இல்லை ஆறும்இல்லை அனாதியாகித் தோன்றுமே!
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
23.
நீளவீடு கட்டுறீர்
நெடுங்கதவு சாத்துறீர்,
வாழவேணும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே?
காலன்ஓசை வந்தபோது கைகலந்து நின்றிடும்
ஆலம்உண்ட கண்டர்பாதம் அம்மைபாதம் உண்மையே!
விளக்கவுரை :
24.
ஓடம்உள்ள போதெல்லாம் நீர்
ஓடியே உலாவலாம்;
ஓடம்உள்ள போதெலாம் உறுதிபண்ணிக் கொள்ளலாம்;
ஓடமும்உடைந்த போதில் ஒப்பிலாத வெளியிலே
ஆடும்இல்லை கோலும்இல்லை யாரும்இல்லை ஆனதே!
விளக்கவுரை :
கிரியை நிலை
25.
வீடெடுத்து வேள்விசெய்து
மெய்யனோடு பொய்யுமாய்
மாடுமக்கள் பெண்டிர்சுற்றம் என்றிருக்கும் மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர்கையில் ஓலைவந்து அழைத்திடில்
ஓடுபெற்ற அவ்விலை பெறாதுகாணும் உடலமே!
விளக்கவுரை :