சிவவாக்கியம் 116 - 120 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

116. நாவில்நூல் அழிந்ததும் நலம்குலம் அழிந்ததும்
மேவுதேர் அழிந்ததும் விசாரம் குறைந்ததும்
பாவிகாள் இதென்னமாயம் வாமநாடு பூசலாய்
ஆவியார் அடங்குநாளில் ஐவரும் அடங்குவார்.

விளக்கவுரை :

117. இல்லைஇல்லை என்றுநீர் இயம்புகின்ற ஏழைகாள்,
இல்லைஎன்று நின்றதொன்றை இல்லை என்னலாகுமோ?
இல்லைஅல்ல ஒன்றுமல்ல இரண்டும்ஒன்றி நின்றதை
எல்லைகண்டு கொண்டபேர் இனிப்பிறப்பது இல்லையே.

விளக்கவுரை :

[ads-post]

118. காரகார காரகார காவல்ஊழி காவலன்
போரபோர போரபோர போரில்நின்ற புண்ணியன்
மாரமார மாரமார மரங்கள்ஏழும் எய்தசீ
ராமராம ராமராம ராமஎன்னும் நாமமே.

விளக்கவுரை :

119. நீடுபாரி லேபிறந்து நேரமான காயந்தான்
வீடுபேறி தென்றபோது வேண்டிஇன்பம் வேண்டுமோ?
பாடிநாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ?
நாடுராம ராமராம ராமமென்னுன் நாமமே!

விளக்கவுரை :

120. உயிருநன்மை யால்உடல் எடுத்துவந்து இருந்திடும்!
உயிர்உடம்பு ஒழிந்தபோது ரூபரூப மாயிடும்
உயிர்சிவத்தின் மாயைஆகி ஒன்றைஒன்று கொன்றிடும்
உயிரும்சத்தி மாயைஆகி ஒன்றைஒன்று தின்னுமே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 111 - 115 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

111. அல்லல்வாசல் ஒன்பதும் அருத்தடைந்த வாசலும்
சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றதும்
நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய்
எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே.

விளக்கவுரை :

112. ஆதியானது ஒன்றுமே அநேக்அநேக ரூபமாய்
சாதிபேத மாய்எழுந்து சர்வசீவன் ஆனபின்
ஆதியோடு இருந்துமீண்டு எழுந்துசென்மம் ஆனபின்
சோதியான ஞானியாகிச் சுத்தமாய் இருப்பனே.

விளக்கவுரை :

[ads-post]

113. மலர்ந்ததாது மூலம்மாய் இவ்வையகம் மலர்ந்ததும்
மலர்ந்தபூ மயக்கம்வந்து அருத்ததும் விடுத்ததும்
புலன்கள்ஐந்தும் பொறிகலங்கி பூமிமேல் விழுந்ததும்
இலங்கலங்கி நின்றமாயம் என்னமாயம் ஈசனே.

விளக்கவுரை :

114. பாரடங்க உள்ளதும் பரந்தவானம் உள்ளதும்
ஓரிடமும் இன்றியே ஒன்றிநின்ற ஒண்சுடர்
ஆரிடமும் இன்றியே அகத்துளும் புறத்துளும்
சீரிடங்கள் கண்டவன் சிவன்தெரிந்து ஞானியே!

விளக்கவுரை :

115. மண்கிடார மேசுமந்து மலையுள்ஏறி மறுகுறீர்,
எண்படாத காரியங்கள் இயலும் என்று கூறுகிறீர்,
தம்பிரானை நாள்தோறும் தரையிலே தலைபடக்
கும்பிடாத மாந்தரோடு கூடிவாழ்வது எங்ஙனே?

விளக்கவுரை :



சிவவாக்கியம் 106 - 110 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

106. பரம்உனக்கு எனக்குவேறு பயம்இலை பராபரா!
கரம்எடுத்து நிற்றலும் குவித்திடக் கடவதும்
சிரம்உருகி அமுதளித்த சீருலாவு நாதனே;
உரம்எனக்கு நீ அளித்த ஓம்நமசி வாயவே!

விளக்கவுரை :

107. பச்சைமண் பதுப்பிலே பழுப்பதிந்த வேட்டுவன்
நிச்சலும் நினைந்திட நினைத்தவண்ணம் ஆயிடும்;
பச்சைமண் இடிந்துபோய் பறந்ததும்பி ஆயிடும்
பிச்சர்காள் அறிந்துகொள்க பிரான்இயற்று கோலமே.

விளக்கவுரை :

[ads-post]

108. ஒளியதான காசிமீது வந்துதங்கு வோர்க்கெலாம்
வெளியதான சோதிமேனி விஸ்வநாத னானவன்
தெளியுமங்கை உடன்இருந்து செப்புகின்ற தாரகம்
எளியதோர் இராமராம ராமமிர்த நாமமே.

விளக்கவுரை :

109. விழியினோடு புனல்விளைந்த வில்லவல்லி யோனியும்
வெளியிலே பிதற்றலாம் விளைவுநின்றது இல்லையே
வெளிபரந்த தேசமும் வெளிக்குள்மூல வித்தையும்
தெளியும் வல்லஞானிகள் தெளிந்திருத்தல் திண்ணமே.

விளக்கவுரை :

110. ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் தெளிந்தபின்
ஓம்நமசி வாயமே உணர்ந்துமெய் உணர்ந்தபின்
ஓம்நமசி வாயமே உட்கலந்து நிற்குமே!

விளக்கவுரை :



சிவவாக்கியம் 101 - 105 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

101. மூன்றுமூன்று மூன்றுமே மூவர்தேவர் தேடிடும்
மூன்றும்அஞ் செழுத்துமாய் முழங்கும் அவ்வெழுத்துளே
ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமும்
தோன்றும்மண்டலத்திலே சொல்லஎங்கும் இல்லையே!     

விளக்கவுரை :

102. சோறுகின்ற பூதம்போல சுணங்குபோல் கிடந்தநீர்
நாறுகின்ற கும்பியில் நயந்தெழுந்த மூடரே,
சீறுகின்ற ஐவரைச் சிணுக்கறுக்க வல்லீரேல்
ஆறுகோடி வேணியார் ஆறில்ஒன்றில் ஆவிரே!

விளக்கவுரை :

[ads-post]

103. வட்டமென்று உம்முளே மயக்கிவிட்ட திவ்வெளி
அட்டவக் கரத்துளே அடக்கமும் ஒடுக்கமும்
எட்டும்எட்டும் எட்டுமாய் இயங்கு சக்கரத்துளே
எட்டலாம் உதித்தது எம்பிரானைநாம் அறிந்தபின்.

விளக்கவுரை :

104. பேசுவானும் ஈசனே, பிரமஞானம் உம்முளே;
ஆசையான ஐவரும் அலைந்தருள் செய்கிறார்;
ஆசையானா ஐவரே அடக்கிஓர் எழுத்திலே
பேசிடாது இருப்பிரேல் நாதன்வந்து பேசுமே.

விளக்கவுரை :

105. நமசிவாய அஞ்செழுத்தும் நல்குமேல் நிலைகளும்
நமசிவாய அஞ்சில்அஞ்சும் புராணமான மாயையும்
நமசிவாய அஞ்செழுத்து நம்முளே இருக்கவே!
நமசிவாய உண்மையை நன்குஉரைசெய் நாதனே!

விளக்கவுரை :
Powered by Blogger.