சிவவாக்கியம் 96 - 100 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

96. அவ்வுதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய்
எவ்வெழுத்து அறிந்தவர்க்கு எழுபிறப்பது இங்கிலை?
சவ்வுதித்த மந்திரத்தைத் தற்பரத்து இருத்தினால்
அவ்வும்உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

97. நவ்விரண்டு காலதாய், நவின்றமவ் வயிறதாய்ச்
சிவ்விரண்டு தோளதாய்ச் சிறந்தவவ்வு வாயதாய்
யவ்விரண்டு கண்ணதாய் அழுர்ந்துநின்ற நேர்மையில்
செவ்வைஒத்து நின்றதே சிவாயஅஞ் செழுத்துமே.

விளக்கவுரை :

[ads-post]

98. இரண்டுமொன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே
சுருண்டுமூன்று வளையமாய் சுணங்குபோல் கிடந்தநீ
முரண்டெழுந்த சங்கின்ஓசை மூலநாடி ஊடுபோய்
அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே!

விளக்கவுரை :

99. கடலிலே திரியும் ஆமை கரையிலேறி முட்டையிட்டுக்
கடலிலே திரிந்தபோது ரூபமான வாறுபோல்
மடலுளே இருக்கும்எங்கள் மணியரங்க சோதியை
உடலுளே நினைந்துநல்ல உண்மையானது உண்மையே!

விளக்கவுரை :

100. மூன்றுமண்ட லத்தினும் முட்டிநின்ற தூணிலும்
நான்றபாம்பின் வாயிலும் நவின்றெழுந்த அட்சரம்;
ஈன்றதாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்;
தோன்றும்ஓர் எழுத்துளே சொல்லஎங்கும் இல்லையே!

விளக்கவுரை :



சிவவாக்கியம் 91 - 95 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

91. உடம்புஉயிர் எடுத்ததோ, உயிர்உடம்பு எடுத்ததோ
உடம்புஉயிர் எடுத்தபோது உருவம்ஏது செப்புவீர்
உடம்புஉயிர் இறந்தபோது உயிர்இறப்பது இல்லையே
உடம்புமெய் மறந்துகண்டு உணர்ந்துஞானம் ஓதுமே.

விளக்கவுரை :

92. அவ்வெனும் எழுத்தினால் அகண்டம்ஏழு ஆக்கினாய்;
உவ்வெனும் எழுத்தினால் உருத்தரித்து நின்றனை;
மவ்வெனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம்;
அவ்வும்உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே!

விளக்கவுரை :

[ads-post]

93. மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடீர்!
மந்திரங்கள் ஆவதும் மறத்தில்ஊறல் அன்றுகாண்;
மந்திரங்கள் ஆவது மதத்தெழுந்த வாயுவை;
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம்ஏதும் இல்லையே!

விளக்கவுரை :

94. என்னஎன்று சொல்லுவேன் இலக்கணம் இலாததை?
பன்னுகின்ற செந்தமிழ்ப் பதம்கடந்த பண்பென
மின்னகத்தில் மின்ஒடுங்கி மின்னதான வாறுபோல்
என்னகத்துள் ஈசனும் யானும்அல்லது இல்லையே!

விளக்கவுரை :

95. ஆலவித்தில் ஆல்ஒடுங்கி ஆலமான வாறுபோல்
வேறுவித்தும் இன்றியே விளைந்துபோகம் எய்திடீர்!
ஆறுவித்தை ஓர்கிலீர் அறிவிலாத மாந்தரே!
பாரும்இத்தை உம்முளே பரப்பிரமம் ஆனதே!

விளக்கவுரை :



சிவவாக்கியம் 86 - 90 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

86. பருகிஓடி உம்முளே பறந்துவந்த வெளிதனை
நிருவியே நினைந்துபார்க்கில் நின்மனம் அதாகுமே.
உருகிஓடி எங்குமாய் ஓடும்சோதி தன்னுளே
கருதுவீர் உமக்குநல்ல காரணம் அதாகுமே.

விளக்கவுரை :

87. சோதியாகி ஆகிநின்ற சுத்தமும் பலித்துவந்து
போதியாத போதகத்தை ஓதுகின்ற பூரணா,
வீதியாக ஓடிவந்து விண்ணடியின் ஊடுபோய்
ஆதிநாதன் தன் நாதன்என்று அனந்தகாலம் உள்ளதே

விளக்கவுரை :

[ads-post]

88. இறைவனால் எடுத்தமாடத் தில்லையம் பலத்திலே
அறிவினால் அடுத்தகாயம் அஞ்சினால் அமைந்ததே.
கருவிநாதம் உண்டுபோய்க் கழன்றவாசல் ஒன்பதும்
ஒருவராய் ஒருவர்கோடி உள்ளுளே அமர்ந்ததே.

விளக்கவுரை :

89. நெஞ்சிலே இருந்திருந்து நெருக்கிஓடும் வாயுவை
அன்பினால் இருந்துநீர் அருகிருத்த வல்லீரேல்
அன்பர்கோயில் காணலாம் அகலும்எண் திசைக்குளே
தும்பிஓடி ஓடியே சொல்லடா சுவாமியே!

விளக்கவுரை :

90. தில்லையை வணங்கிநின்ற தெண்டனிட்ட வாயுவே
எல்லையைக் கடந்துநின்ற ஏகபோக மாய்கையே
எல்லையைக் கடந்துநின்ற சொர்க்கலோக வெளியிலே
வெள்ளையும் சிவப்புமாகி மெய்கலந்து நின்றதே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 81 - 85 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

81. மிக்கசெல்வம் நீபடைத்த விறகுமேவிப் பாவிகாள்
விறகுடன் கொளுத்திமேனி வெந்துபோவது அறிகிலீர்
மக்கள்பெண்டீர் சுற்றம்என்று மாயைகாணும் இவையெலாம்
மறலிவந்து அழைத்தபோது வந்துகூடலாகுமோ?

விளக்கவுரை :

82. ஒக்கவந்து மாதுடன் செறிந்திடத்தில் அழகியே
ஒருவராகி இருவராகி இளமைபெற்ற ஊரிலே
அக்கணிந்து கொன்றைசூடி அம்பலத்தில் ஆடுவார்
அஞ்செழுத்தை ஓதிடில் அனேகபாவம் அகலுமே.

விளக்கவுரை :

[ads-post]

83. மாடுகன்று செல்வமும் மனைவிமைந்தர் மகிழவே
மாடமாளி கைப்புறத்தில் வாழுகின்ற நாளிலே
ஓடிவந்து காலதூதர் சடுதியாக மோதவே
உடல்கிடந்து உயிர்கழன்ற உண்மைகண்டும் உணர்கிலீர்!

விளக்கவுரை :

84. பாடுகின்ற உம்பருக்குள் ஆடுபாதம் உன்னியே
பழுதிலாத கன்மகூட்டம் இட்டஎங்கள் பரமனே
நீடுசெம்பொன் அம்பலத்துள் ஆடுகொண்ட அப்பனே,
நீலகண்ட காலகண்ட நித்தியகல் யாணனே.

விளக்கவுரை :

85. கானமற்ற காட்டகத்தில் வெந்தெழுந்த நீறுபோல்
ஞானம்உற்ற நெஞ்சகத்தில் நல்லதேதும் இல்லையே;
ஊனமற்ற சோதியோடு உணர்வுசேர்ந்து அடக்கினால்
தேன்அகத்தின் ஊறல்போல் தெளிந்ததே சிவாயமே.

விளக்கவுரை :
Powered by Blogger.