சிவவாக்கியம் 256 - 260 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

256. பாங்கினோடு இருந்துகொண்டு பரமன்அஞ் செழுத்துளே
ஓங்கிநாடி மேல்இருந்து உச்சரித்த மந்திரம்
மூங்கில்வெட்டி நார்உரித்து முச்சில்செய் விதத்தினில்
ஆய்ந்தநூலில் தோன்றுமே அரிந்துணர்ந்து கொள்ளுமே.

விளக்கவுரை :

257. புண்டரீக மத்தியில் உதித்தெழந்த சோதியை
மண்டலங்கள் மூன்றினோடு மன்னுகின்ற மாயனை
அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லீரேல்
கண்டகோயில் தெய்வம்என்று கையெடுப்ப தில்லையே.

விளக்கவுரை :

[ads-post]

258. அம்பலங்கள் சந்தியில் ஆடுகின்ற வம்பனே
அன்பனுக்குள் அன்பனாய் நிற்பதுஆதி வீரனே
அன்பருக்குள் அன்பராய் நின்றஆதி நாதனே
உம்பருக்கு உண்மையாய் நின்றஉண்மை உண்மையே.

விளக்கவுரை :

259. அண்ணலாவது ஏதடா? அறிந்துரைத்த மந்திரம்
தண்ணலாக வந்தவன் சகலபுராணம் கற்றவன்
கண்ணனாக வந்ததன் காரணத் துதித்தவன்
ஒண்ணதாவது ஏதடா? உண்மையான மந்திரம்?

விளக்கவுரை :

260. உள்ளதோ புறம்பதோ உயிர்ஒடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினவவேணும் என்கிறீர்?
உள்ளதும் புறம்பதும் ஒத்தபோது நாதமாம்
கள்ளவாச லைத்திறந்து காணவேணும் மந்திரம்.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 251 - 255 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

251. வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே
அஞ்செழுத்தின் உண்மையை அறிகிலாத மாந்தர்காள்
வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லீரேல்
அஞ்செழுத்தின் உண்மையை அறிந்துகொள்ள லாகுமே.

விளக்கவுரை :

252. காயிலாத சோலையில் கனியுகந்த வண்டுகள்
ஈயிலாத தேனையுண்டு இராப்பகல் உறங்குறீர்
பாயிலாத கப்பலேறி அக்கரைப் படுமுனே
வாயினால் உரைப்பதாகு மோமவுன ஞானமே.

விளக்கவுரை :

[ads-post]

253. பேய்கள்பேய்கள் என்கிறீர் பிதற்குகின்ற பேயர்காள்,
பேய்கள்பூசை கொள்ளுமோ பிடாரிபூசை கொள்ளுமோ
ஆதிபூசை கொள்ளுமோ அனாதி பூசை கொள்ளுமோ
காயமான பேயலோ கணக்கறிந்து கொண்டதே.

விளக்கவுரை :

254. மூலமண்ட லத்திலே முச்சதுரம் ஆதியாய்
நாலுவாசல் எம்பிரான் நடுஉதித்த மந்திரம்
கோலிஎட்டு இதழுமாய் குளிர்ந்தலர்ந்த தீட்டமாய்
மேலும்வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

255. ஆதிநாடி நாடிஓடிக் காலைமாலை நீரிலே
சோதிமூல மானநாடி சொல்லிறந்த தூவெளி
ஆதிகூடி நெற்பறித்தது அகாரமாதி ஆகமம்
பேதபேதம் ஆகியே பிறந்துடல் இறந்ததே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 246 - 250 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

246. உன்னையற்ப நேரமும் மறந்திருக்க லாகுமோ
உள்ளமீது உறைந்தெனை மறைப்பிலாத சோதியைப்
பொன்னவென்ற பேரொளிப் பொருவில்லாத ஈசனே
பொன்னடிப் பிறப்பில்லாமை என்றுநல்க வேணுமே.

விளக்கவுரை :

247. பிடித்ததண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள்
தடித்தகோலம் அத்தைவிட்டு சாதிபேதங் கொண்மினோ,
வடித்திருந்த தோர்சிவத்தை வாய்மைகூற வல்லீரேல்
திடுக்கமுற்ற ஈசனைச் சென்றுகூட லாகுமே.

விளக்கவுரை :

[ads-post]

248. சத்திநீ தயவுநீ தயங்குசங்கின் ஓசைநீ
சித்திநீ சிவனும்நீ சிவாயமாம் எழுத்துநீ
முத்திநீ முதலும்நீ மூவரான தேவர்நீ
அத்திபூரம் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.

விளக்கவுரை :

249. சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திரச் சழக்கரே
பொத்தகத்தை மெத்தவைத்துப் போதமோதும் பொய்யரே
நிட்டைஏது ஞானமேது? நீரிருந்த அட்சரம்
பட்டைஏது? சொல்லீரே பாதகக் கபடரே?

விளக்கவுரை :

250. உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும்
வெண்மையாகி நீரிலே விரைந்துநீர தானதும்
தண்மையான காயமே தரித்துஉருவம் ஆனதும்
தெண்மையான ஞானிகாள் தெளிந்துரைக்க வேணுமே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 241 - 245 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

241. ஆடுநாடு தேடினும் ஆனைசேனை தேடினும்
கோடிவாசி தேடினும் குறுக்கேவந்து நிற்குமோ?
ஓடிஇட்ட பிச்சையும் உகந்துசெய்த தர்மமும்
சாடிவிட்ட குதிரைபோல் தர்மம்வந்து நிற்குமே.

விளக்கவுரை :

242. எள்இரும்பு கம்பளி இடும்பருத்தி வெண்கலம்
அள்ளிஉண்ட நாதனுக்கோர் ஆடைமாடை வத்திரம்
உள்ளிருக்கும் வேதியர்க்கு உற்றதானம் ஈதிரால்
மெள்ளவந்து நோய் அனைத்தும் மீண்டிடும் சிவாயமே.

விளக்கவுரை :

[ads-post]

243. ஊரிலுள்ள மனிதர்காள் ஒருமனதாய்க் கூடியே
தேரிலே வடத்தைவிட்டு செம்பைவைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதரை
போரிலான மனிதர்பண்ணும் புரளிபாரும் பாருமே.

விளக்கவுரை :

244. மருள்புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே
குருக்கொடுத்த மந்திரம் கொண்டுநீந்த வல்லீரேல்
குருக்கொடுத்த தொண்டரும் முகனொடித்த பிள்ளையும்
பருத்திபட்ட பன்னிரண்டு பாடுதான் படுவரே.

விளக்கவுரை :

245. அன்னைகர்ப்ப அறைஅதற்குள் அங்கியின்பிர காசமாய்
அந்தறைக்குள் வந்திருந்து அரியவந்து ரூபமாய்
தன்னைஒத்து நின்றபோது தடையறுத்து வெளியதாய்
தங்கநற் பெருமைதந்து தலைவனாய் வளர்ந்ததே.

விளக்கவுரை :
Powered by Blogger.