சிவவாக்கியம் 361 - 365 of 525 பாடல்கள்
361.
உட்கமல மோனமீதில் உயங்கிநின்ற
நந்தியை
விக்கலோடு கீயுமாகி வில்வளைவின் மத்தியில்
முட்பொதிந்தது என்னவே முடுகிநின்ற செஞ்சுடர்
கட்குவைகள் போலவும் கடிந்துநின்ற காட்சியே.
விளக்கவுரை :
362.
உந்தியில் சுழிவழியில்
உச்சியுற்ற மத்தயில்
சந்திரன் ஒளிகரணம் தாண்டிநின்ற செஞ்சுடர்
பந்தமாக வில்வளைவில் பஞ்சபூத விஞ்சையாம்
கிந்துபோல கீயில்நின்று கீச்சுமூச்சு என்றதே.
விளக்கவுரை :
[ads-post]
[ads-post]
363.
செச்சையென்ற மூச்சினோடு
சிகாரமும் வகாரமும்
பச்சையாகி நின்றதே பரவெளியின் பான்மையே
இச்சையான ஊவிலே இருந்தெழுந்த ஈயிலே
உச்சியான கோணத்தில் உதித்ததே சிவாயமே.
விளக்கவுரை :
364.
ஆறுமூலைக் கோணத்தில்
அமைந்தஒன்ப தாத்திலே
தாறுமென்று நங்கையான நாவியும் தெரிந்திடக்
கூறுமென்று ஐவர்அங்கு கொண்டுநின்ற மோனமே
பாறுகொண்டு நின்றது பரந்ததே சிவாயமே.
விளக்கவுரை :
365.
பறந்ததே கறந்தபோது
பாய்ச்சலூரின் வழியிலே
பிறந்ததே பிராணன்அன்றிப் பெண்ணும்ஆணும் அல்லவே
துறந்ததோ சிறந்ததோ தூயதுங்கம் ஆனதோ
இறந்தபோதில் அன்றதே இலங்கிடும் சிவாயமே.
விளக்கவுரை :