சிவவாக்கியம் 236 - 240 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

236. பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அதென்றுநீர்
எண்ணமுற்றும் என்னபேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள்
பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும்
ஒண்ணுமாகி உலகளித்த ஒன்றைநெஞ்சில் உண்ணுமே.

விளக்கவுரை :

237. நாலதான போனியும் நவின்றவிந்தும் ஒன்றதாய்
ஆலதான வித்துளே அமர்ந்தொடுங்கு மாறுபோல்
சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம்
மேலதான ஞானிகாள் விரித்துரைக்க வேணுமே.

விளக்கவுரை :

[ads-post]

238. அருவமாய் இருந்தபோது அன்னைஅங்கு அறிந்திலை
உருவமாய் இருந்தபோது உன்னைநான் அறிந்தனன்
குருவினான் தெளிந்துகொண்டு கோதிலாத ஞானமாம்
பருவமான போதலோ பரப்பிரமம் ஆனதே.

விளக்கவுரை :

239. பிறப்பதும் இறப்பதும் பிறந்திடாது இருப்பதும்
மறப்பதும் நினைப்பதும் மறைந்ததைத் தெளிந்ததும்
துறப்பதும் கொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும்
பிறப்பதும் இறப்பதும் பிறந்தவீடு அடங்குமே.

விளக்கவுரை :

240. கண்ணிலே இருப்பனே கருங்கடல் கடைந்தமால்
விண்ணிலே இருப்பனே மேவிஅங்கு நிற்பனே
தன்னுளே இருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே இருப்பனே எங்குமாகி நிற்பனே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 231 - 235 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

231. விழுத்தகண் குவித்தபோ தடைந்துபோய் எழுத்தெலாம்
விளைந்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே
அழுத்தினாலு மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில்
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை ஆனதே.

விளக்கவுரை :

232. நல்லமஞ் சனங்கள்தேடி நாடிநாடி ஓடுறீர்
நல்லமஞ் சனங்களுண்டு நாதன்உண்டு நம்முளே
எல்லைமஞ் சனங்கள்தேடி ஏகபூசை பண்ணினால்
தில்லைமேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே.

விளக்கவுரை :

[ads-post]

233. உயிர்அகத்தில் நின்றிடும் உடம்பெடுத்த தற்குமுன்
உயிர்அகாரம் ஆயிடும் உடல்உகாரம் ஆயிடும்
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது அச்சிவம்
உயிரினால் உடம்புதான் எடுத்தவாறு உரைக்கினேன்.

விளக்கவுரை :

234. அண்டம்ஏழும் உழலவே அனந்தயோனி உழலவே
பண்டைமால், அயனுடன் பரந்துநின்று உழலவே
எண்திசை கடந்துநின்ற இருண்டசத்தி உழலவே
அண்டரண்டம் ஒன்றதாய் ஆதிநட்டம் ஆடுமே.

விளக்கவுரை :

235. உருவநீர் உறுப்புகொண்டு உருத்தரித்து வைத்திடும்
பெரியபாதை பேசுமோ பிசாசைஒத்த மூடரே,
கரியமாலம் அயனுமாக காணொணாத கடவுளை
உரிமையாக உம்முளே உணர்ந்துணர்ந்து கொள்ளுமே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 226 - 230 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

226. அகாரகார ணத்திலே அனேகனேக ரூபமாய்
உகாரகார ணத்திலே உருத்தரித்து நின்றனன்
மகாரகார ணத்திலே மயங்குகின்ற வையகம்
சிகாரகார ணத்திலே தெளிந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

227. அவ்வெழுத்தில் உவ்வுவந்து அகாரமும் சனித்ததோ?
உவ்வெழுத்து மவ்வெழுத்தும் ஒன்றைஒன்றி நின்றதோ!
செவ்வைஒத்து நின்றலோ சிவபதங்கள் சேரினும்
மிவ்வையொத்த ஞானிகாள், விரித்துரைக்க வேணுமே.

விளக்கவுரை :

[ads-post]

228. ஆதியான அஞ்சிலும் அனாதியான நாலிலும்
சோதியான மூன்றிலும் சொரூபம்அற்ற ரெண்டிலும்
நீதியான தொன்றிலே நிறைந்துநின்ற வத்துவை
ஆதியான தொன்றுமே அற்றதஞ் செழுத்துமே.

விளக்கவுரை :

229. வானிலாதது ஒன்றுமில்லை வானுமில்லை வானிடில்
ஊனிலாதது ஒன்றுமில்லை ஊனுமில்லை ஊனிடில்
நானிலாதது ஒன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில்
தானிலாதது ஒன்றுமில்லை தயங்கி ஆடுகின்றதே!

விளக்கவுரை :

230. சுழித்ததோர் எழுத்தைஉன்னி சொல்லுமுகத்து இருத்தியே
துன்ப்இன்ப முங்கடந்து சொல்லும்நாடி யூடுபோய்
அழுத்தமான அக்கிரத்தின் அங்கியை எழுப்பியே
ஆறுபங்க யம்கடந்து அப்புறத்து வெளியிலே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 221 - 225 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

221. சுழித்தவோர் எழுத்தையும் சொன்முகத்து இருத்தியே
துன்ப்இன்ப முங்கடந்து செல்லுமூல நாடிகள்
அழுத்தமான அக்கரம் அங்கியுள் எழுப்பியே
ஆறுபங்க யம்கலந்து அப்புறத் தலத்துளே.

விளக்கவுரை :

222. உருத்தரிப்ப தற்குமுன் உயிர்புகுந்த நாதமும்
கருத்தரிப்ப தற்குமுன் காயம் என்ன சோணிதம்
அருள்தரிப்ப தற்குமுன் அறிவுமூலா தாரமாம்
குறித்தறிந்து கொள்ளுவீர் குணங்கெடும் குருக்களே.

விளக்கவுரை :

[ads-post]

223. எங்கும்உள்ள ஈசனார் எம்முடல் புகுந்தபின்
பங்குகூறு போடுவார், பாடுசென்று அணுகிலார்
எங்கள்தெய்வம் உங்கள்தெய்வம் என்றிரண்டு பேதமோ?
உங்கள்பேதம் அன்றியே உண்மைஇரண்டு இல்லையே?

விளக்கவுரை :

224. அரியுமாகி அயனுமாகி அண்டமெங்கும் ஒன்றதாய்ப்
பெரியதாகி உலகுதன்னில் நின்றபாதம் ஒன்றலோ
விரிவதென்று வேறுசெய்த வேடமிட்ட மூடரே,
அறிவினோடு பாரும்இங்கும் அங்கும் ஒன்றதே.

விளக்கவுரை :

225. வெந்தநீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர்
சிந்தையுள் நினைந்துமே தினம்செபிக்கு மந்திரம்
முந்துமந்தி ரத்திலோ, மூலமந்திரத்திலோ,
எந்தமந்தி ரத்திலோ ஈசன்வந்து இயங்குமே?

விளக்கவுரை :
Powered by Blogger.