சிவவாக்கியம் 361 - 365 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

361. உட்கமல மோனமீதில் உயங்கிநின்ற நந்தியை
விக்கலோடு கீயுமாகி வில்வளைவின் மத்தியில்
முட்பொதிந்தது என்னவே முடுகிநின்ற செஞ்சுடர்
கட்குவைகள் போலவும் கடிந்துநின்ற காட்சியே.

விளக்கவுரை :

362. உந்தியில் சுழிவழியில் உச்சியுற்ற மத்தயில்
சந்திரன் ஒளிகரணம் தாண்டிநின்ற செஞ்சுடர்
பந்தமாக வில்வளைவில் பஞ்சபூத விஞ்சையாம்
கிந்துபோல கீயில்நின்று கீச்சுமூச்சு என்றதே.

விளக்கவுரை :

[ads-post]

363. செச்சையென்ற மூச்சினோடு சிகாரமும் வகாரமும்
பச்சையாகி நின்றதே பரவெளியின் பான்மையே
இச்சையான ஊவிலே இருந்தெழுந்த ஈயிலே
உச்சியான கோணத்தில் உதித்ததே சிவாயமே.

விளக்கவுரை :

364. ஆறுமூலைக் கோணத்தில் அமைந்தஒன்ப தாத்திலே
தாறுமென்று நங்கையான நாவியும் தெரிந்திடக்
கூறுமென்று ஐவர்அங்கு கொண்டுநின்ற மோனமே
பாறுகொண்டு நின்றது பரந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

365. பறந்ததே கறந்தபோது பாய்ச்சலூரின் வழியிலே
பிறந்ததே பிராணன்அன்றிப் பெண்ணும்ஆணும் அல்லவே
துறந்ததோ சிறந்ததோ தூயதுங்கம் ஆனதோ
இறந்தபோதில் அன்றதே இலங்கிடும் சிவாயமே.

விளக்கவுரை :


சிவவாக்கியம் 356 - 360 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

356. சுடரதாகி எழும்பியங்குத் தூபமான காலமே
இடரதாய்ப் புவியும்விண்ணும் ஏகமாய் அமைக்கமுன்
படரதாக நின்றஆதி பஞ்சபூதம் ஆகியே
அடரதாக அண்டம்எங்கும் ஆண்மையாக நின்றதே.

விளக்கவுரை :

357. நின்றிருந்த சோதியை நிலத்தில்உற்ற மானிடர்
கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற்று உலாவுவோர்
கண்டமுற்ற மேன்முனையில் காட்சிதன்னைக் காணுவார்
கன்றிஅற்று நாலைபொங்கி நாதமும் மகிழ்ந்திடும்.

விளக்கவுரை :

[ads-post]

358. வயங்குமோனச் செஞ்சுடர் வடிந்தசோதி நாதமும்
கயங்கள்போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே
பயங்கொடின்றி இன்றியே படர்ந்துநின்ற பான்மையை
நயங்கள்கோவென் றேநடுங்கி நங்கையான தீபமே.

விளக்கவுரை :

359. தீபஉச்சி முனையிலே திவாகரத்தின் கழியிலே
கோபமாறு கூவிலே கொதித்துநின்ற தீயிலே
தாபமான மூலையில் சமைந்துநின்ற சூட்சமும்
சாபமான மோட்சமும் தடிந்துநின்று இலங்குமே.

விளக்கவுரை :

360. தேசிகன் சுழன்றதே திரிமுனையின் வாலையில்
வேசமோடு வாலையில் வியன்இருந்த மூலையில்
நேசசந்தி ரோதயம் நிறைந்திருந்த வாயிலில்
வீசிவீசி நின்றதே விரிந்துநின்ற மோனமே.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 351 - 355 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

351. அஞ்சுகொம்பில் நின்றுநாதம் ஆலைபோல் எழும்பியே
பிஞ்சினோடு பூமலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே
செஞ்சுடர் உதித்தபோது தேசிகன் கழன்றுடன்
பஞ்சபூதம் ஆனதே பறந்துநின்ற மோனமே.

விளக்கவுரை :

352. சடுதியான கொம்பிலே தத்துவத்தின் இயலிலே
அடுதியான ஆவிலே அரன்இருந்த ஊவிலே
இடுதிஎன்ற சோலையில் இருந்தமுச் சுடரிலே
நடுதிஎன்று நாதம்ஓடி நன்குற அமைந்ததே.

விளக்கவுரை :

[ads-post]

353. அமையுமாலின் மோனமும் அரன்இருந்த மோனமும்
சமையும்பூத மோனமும் தரித்திருந்த மோனமும்
இமையும்கொண்ட வேகமும் இலங்கும்உச்சி மோனமும்
தமையறிந்த மாந்தரே சடத்தைஉற்று நோக்கிலார்.

விளக்கவுரை :

354. பாய்ச்சலூர் வழியிலே பரன்இருந்த சுழியிலே
காய்ச்சகொம்பின் நுனியிலே கனியிருந்த மலையிலே
வீச்சமானது ஏதடா? விரிவுதங்கும் இங்குமே
மூச்சினோடு மூச்சைவாங்கு முட்டிநின்ற சோதியே.

விளக்கவுரை :

355. சோதிசோதி என்றுநாடித் தோற்பவர் சிலவரே
ஆதிஆதி என்றுநாடும் ஆடவர் சிலவரே
வாதிவாதி என்றுசொல்லும் வம்பரும் சிலவரே
நீதிநீதி நீதிநீதி நின்றிடும் முழுச்சுடர்.

விளக்கவுரை :



சிவவாக்கியம் 346 - 350 of 525 பாடல்கள்

sivavakkiyar-sivavakkiyam

346. ஆவிஆவி ஆவிஆவி ஐந்துகொம்பின் ஆவியே
மேவிமேவி மேவிமேவி மேதினியில் மானிடர்
வாவிவாவி வாவிவாவி வண்டர்கள் அறிந்திடார்
பாவிபாவி பாவிபாவி படியிலுற்ற மாந்தரே.

விளக்கவுரை :

347. வித்திலே முளைத்தசோதி வில்வளையின் மத்தியில்
முத்திலே ஒளிவதாகி மோனமான தீபமே
நத்திலே திரட்சிபோன்ற நாதனை அறிந்திடார்
வத்திலே கிடந்துழன்ற வாலையான சூட்சமே.

விளக்கவுரை :

[ads-post]

348. மாலையோடு காலையும் வடிந்துபொங்கும் மோனமே
மாலையோடு காலையான வாறறிந்த மாந்தரே
மூலையான கோணமின் முளைத்தெழுந்த செஞ்சுடர்
தாலையோடு பானகன்று தங்கி நின்ற மோனமே.

விளக்கவுரை :

349. மோனமான வீதியில் முடுகிநின்ற நாதமே
ஈனமின்றி வேகமான வேகம்என்ன வேகமே
கானமான மூலையில் கனிந்திருந்த வாலையில்
ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயமே.

விளக்கவுரை :

350. உச்சிமத்தி வீதியில் ஒழிந்திருந்த சாதியில்
பச்சியுற்ற சோமனும் பரந்துநின்று லாவவே
செச்சியான தீபமே, தியானமான மோனமே,
கச்சியான மோனமே, கடந்ததே சிவாயமே.

விளக்கவுரை :
Powered by Blogger.