பத்திரகிரியார் பாடல்கள் 51 - 55 of 231 பாடல்கள்

51. பருவத் தலைவரொடும் புல்கியின்பம் கொள்வதற்குத்
தெரிவைப் பருவம் வந்து சிக்குவதும் எக்காலம்?

விளக்கவுரை :

52. தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டெல்லாம் அறிந்து
குருவை அறிந்தேநினைத்துக் கும்பிடுவது எக்காலம்?

விளக்கவுரை :

53. வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி
யம்பழமும் ஓடும்போல் ஆவதினி எக்காலம்?

விளக்கவுரை :

54. பற்றற்று நீரில் படர்தா மரை இலைபோல்
சுற்றத்தை நீக்கிமனம் தூர நிற்பது எக்காலம்?

விளக்கவுரை :

55. சல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகம்
சொல்லாரக் கண்டு எனக்குச் சொல்வதினி எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 46 - 50 of 231 பாடல்கள்

46. தொடக்கைச் சதம் எனவே சுமந்து அலைந்து வாடாமல்
உடக்கைக் கழற்றி உனைஅறிவது எக்காலம்?

விளக்கவுரை :

47. ஆசைவலைப் பாசத்து அகப்பட்டு மாயாமல்
ஓசைமணித் தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம்?

விளக்கவுரை :

48. கூறரிய நால் வேதம் கூப்பிட்டும் காணாத
பார ரகசியத்தைப் பார்த்திருப்பது எக்காலம்?

விளக்கவுரை :

49. புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய்
எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்?

விளக்கவுரை :

50. தக்கும்வகைக்கு ஓர்பொருளும் சாராம லேநினைவில்
பக்குவம்வந்துன் அருளைப் பார்த்திருப்பது எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 41 - 45 of 231 பாடல்கள்

41. இம்மைதனில் பாதகனாய் இருவினைக்கீடாய் எடுத்த
பொம்மைதனைப்போட்டு உன்னைப் போற்றி நிற்பது எக்காலம்?

விளக்கவுரை :

42. உப்பிட்ட பாண்டம் உடைந்து கருக்கொள்ளு முன்னே
அப்பிட்ட வேணியனுக்கு ஆட்படுவது எக்காலம்?

விளக்கவுரை :

43. சேவைபுரிந்து சிவரூபக் காட்சிகண்டு
பாவைதனைக் கழித்துப் பயன் அடைவது எக்காலம்?

விளக்கவுரை :

44. காண்டத்தை வாங்கிக் கருமேகம் மீண்டது போல்
பாண்டத்தை நீக்கிப் பரம் அடைவது எக்காலம்?

விளக்கவுரை :

45. சோற்றுத் துருத்திதனைச் சுமந்து அலைந்து வாடாமல்
ஊத்தைச் சடம்போட்டு உனை அடைவது எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 36 - 40 of 231 பாடல்கள்

36. செஞ்சலத்தினால் திரண்ட சென்ன மோட்சம்பெறவே
சஞ்சலத்தை விட்டு உன் சரண் அடைவது எக்காலம்?

விளக்கவுரை :

37. கும்பிக்கு இரைதேடிக் கொடுப்பார் இடம்தோறும்
வெம்பித் திரிகை விடுப்பது இனி எக்காலம்?

விளக்கவுரை :

38. ஆடுகின்ற சூத்திரம் தான் அறுமளவுமேதிரிந்து
போடுகின்ற நாள் வருமுன் போற்றுவதும் எக்காலம்?


39. நவசூத் திர வீட்டை நான்என்று அலையாமல்
சிவசூத் திரத்தைத் தெரிந்தறிவது எக்காலம்?

விளக்கவுரை :

40. பரந்து மலசலங்கள் பாயும் புழுக்கூட்டை விட்டுக்
கரந்துன் அடிஇணைக்கீழ்க் கலந்து நிற்பது எக்காலம்?

விளக்கவுரை :
Powered by Blogger.