பத்திரகிரியார் பாடல்கள் 121 - 125 of 231 பாடல்கள்

121. ஒளிஇட்ட மெய்ப்பொருளை உள் வழியிலே அடைத்து
வெளியிட்டுச் சாத்திவைத்து வீடு உறுவது எக்காலம்?

விளக்கவுரை :

122. காந்தம் வலித்து இரும்பைக் கரத்திழுத்துக் கொண்டதுபோல்
பாய்ந்து பிடித்திழுத்துன் பாதத்தில் வைப்பது எக்காலம்?

விளக்கவுரை :

123. பித்தாயம் கொண்டு பிரணவத்தை ஊடறுத்துச்
செந்தாரைப் போலே திரிவது இனி எக்காலம்?

விளக்கவுரை :

124. ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள் எலும்பாய்க்
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம்?

விளக்கவுரை :

125. ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 116 - 120 of 231 பாடல்கள்

116. எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே
அழுத்தமாய்ச் சிந்தையை வைத்தன்பு கொள்வது எக்காலம்?

விளக்கவுரை :

117. அருளாய் உருவாகி ஆதி அந்தம் ஆகின்ற
குருவாக வந்து எனை ஆட்கொண்டு அருள்வது எக்காலம்?

விளக்கவுரை :

118. நான் என்று அறிந்தவனை நான் அறியாக் காலம் எல்லாம்
தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம்?

விளக்கவுரை :

119. என் மயமாய்க் கண்டதெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்த பின்பு
தன் மயமாய்க் கொண்டதிலே சார்ந்து நிற்பது எக்காலம்?

விளக்கவுரை :

120. ஒளியில் ஒளியாம் உருப்பிறந்த வாறதுபோல்
வெளியில் வெளியான விதம் அறிவது எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 111 - 115 of 231 பாடல்கள்

111. ஆர் என்று கேட்டதுவும் அறிவு வந்து கண்டதுவும்
பார் என்று சொன்னதுவும் பகுத்தறிவது எக்காலம்?

விளக்கவுரை :

112. நினைக்கும் நினைவுதோறும் நிறைந்த பரிபூரணத்தை
முனைக்குமேல் கண்டு கண்ணில் முத்துதிர்ப்பது எக்காலம்?

விளக்கவுரை :

113. முப்பாழும் பாழாய், முதற்பாழும் சூனியமாய்
அப்பாழும் பாழாய் அன்பு செய்வது எக்காலம்?

விளக்கவுரை :

114. சீ யென்று எழுந்து தெளிந்து நின்ற வான் பொருளை
நீ யென்று கண்டு நிலை பெறுவது எக்காலம்?

விளக்கவுரை :

115. வவ்வெழுத்தும் மவ்வெழுத்தும் வாளாகும் சிவ்வெழுத்தும்
அவ்வெழுத்தின் உள்ளே அடங்கி நிற்பது எக்காலம்?

விளக்கவுரை :

பத்திரகிரியார் பாடல்கள் 106 - 110 of 231 பாடல்கள்

106. ஆணவ மாயத்தால் அழிந்து உடலம் போகாமுன்
காணுதலால் இன்பமற்றுக் கண்டறிவது எக்காலம்?

விளக்கவுரை :

107. மும்மலமும் சேர்ந்து முளைத்தெழுந்த காயம் இதை
நில்மலமாய்க் கண்டு வினை நீங்கி இருப்பது எக்காலம்?

விளக்கவுரை :

108. முன்னை வினை கெடவே மூன்று வகைக் காட்சியினால்
உன்னை வெளிப்படுத்தி உறுவது இனி எக்காலம்?

விளக்கவுரை :

109. கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்தறிந்து கொண்டதுவும்
விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவதும் எக்காலம்?

விளக்கவுரை :

110. கனவு கண்டால் போல் எனக்குக் காட்டி மறைத்தே இருக்க
நினைவைப் பரவெளியில் நிறுத்துவது எக்காலம்?

விளக்கவுரை :
Powered by Blogger.