பத்திரகிரியார் பாடல்கள் 116 - 120 of 231 பாடல்கள்


பத்திரகிரியார் பாடல்கள் 116 - 120 of 231 பாடல்கள்

116. எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே
அழுத்தமாய்ச் சிந்தையை வைத்தன்பு கொள்வது எக்காலம்?

விளக்கவுரை :

117. அருளாய் உருவாகி ஆதி அந்தம் ஆகின்ற
குருவாக வந்து எனை ஆட்கொண்டு அருள்வது எக்காலம்?

விளக்கவுரை :

118. நான் என்று அறிந்தவனை நான் அறியாக் காலம் எல்லாம்
தான் என்று நீ இருந்ததனை அறிவது எக்காலம்?

விளக்கவுரை :

119. என் மயமாய்க் கண்டதெல்லாம் எண்ணி எண்ணிப் பார்த்த பின்பு
தன் மயமாய்க் கொண்டதிலே சார்ந்து நிற்பது எக்காலம்?

விளக்கவுரை :

120. ஒளியில் ஒளியாம் உருப்பிறந்த வாறதுபோல்
வெளியில் வெளியான விதம் அறிவது எக்காலம்?

விளக்கவுரை :

பத்திரகிரியார், பத்திரகிரியார் பாடல்கள், pattrakiriyar, pattrakiriyar paadalkal, siththarkal