பத்திரகிரியார் பாடல்கள் 121 - 125 of 231 பாடல்கள்
121. ஒளிஇட்ட மெய்ப்பொருளை உள் வழியிலே அடைத்து
வெளியிட்டுச் சாத்திவைத்து வீடு
உறுவது எக்காலம்?
விளக்கவுரை :
122. காந்தம் வலித்து இரும்பைக் கரத்திழுத்துக் கொண்டதுபோல்
பாய்ந்து பிடித்திழுத்துன்
பாதத்தில் வைப்பது எக்காலம்?
விளக்கவுரை :
123. பித்தாயம் கொண்டு பிரணவத்தை ஊடறுத்துச்
செந்தாரைப் போலே திரிவது இனி
எக்காலம்?
விளக்கவுரை :
124. ஒழிந்த கருத்தினை வைத்து உள் எலும்பு வெள் எலும்பாய்க்
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது
இனி எக்காலம்?
விளக்கவுரை :
125. ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது
எக்காலம்?
விளக்கவுரை :