பத்திரகிரியார் பாடல்கள் 166 - 170 of 231 பாடல்கள்

166. கூட்டில் அடைப்பட்ட புழு குளவி உருக்கொண்டதுபோல்
வீட்டில்அடை பட்டுஅருளை வேண்டுவதும் எக்காலம்?

விளக்கவுரை :

167. கடலில்ஒளித்திருந்த கனல்எழுந்து வந்தாற்போல்
உடலில்ஒளித்த சிவம்ஒளி செய்வது எக்காலம்?

விளக்கவுரை :

168. அருணப் பிரகாசம் அண்டஎங்கும் போர்த்தது போல்
கருணைத் திருவடியில் கலந்து நிற்பது எக்காலம்?

விளக்கவுரை :

169. பொன்னில் பலவிதமாம் பூடணம்உண்டானது போல்
உன்னில் பிறந்து உன்னில்ஒடுங்குவதும் எக்காலம்?

விளக்கவுரை :

170. நாயிற் கடைப்பிறப்பால் நான்பிறந்த துன்பம்அற
வேயில் கனல் ஒளிபோல் விளங்குவதும் எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 161 - 165 of 231 பாடல்கள்

161. மனதைஒரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி
என தறிவைஅம்பாக்கி எய்வது இனி எக்காலம்?

விளக்கவுரை :

162. என்னை இறக்கஎய்தே என்பழியை ஈடழித்த
உன்னை வெளியில் வைத்தேஒளித்து நிற்பது எக்காலம்?

விளக்கவுரை :

163. கடத்துகின்ற தோணிதனைக் கழைகள் குத்தி விட்டாற்போல்
நடத்துகின்ற சித்திரத்தை நான்அறிவது எக்காலம்?

விளக்கவுரை :

164. நின்றநிலை பேராமல், நினைவில்ஒன்றும் சாராமல்
சென்றநிலை முத்தி என்று சேர்ந்தறிவது எக்காலம்?

விளக்கவுரை :

165. பொன்னும் வெள்ளியும் பூண்ட பொற்பதத்தைஉள் அமைத்து
மின்னும் ஒளிவெளியே விட்டு அடைப்பது எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 156 - 160 of 231 பாடல்கள்

156. அல்லும் பகலும் என்றன் அறிவை அறிவால் அறிந்து
சொல்லும் உரைமறந்து தூங்குவதும் எக்காலம்?

விளக்கவுரை :

157. இயங்கும் சராசரத்தில் எள்ளும் எண்ணெ யும்போல
முயங்கும் அந்த வேத முடிவு அறிவது எக்காலம்?

விளக்கவுரை :

158. ஊனாகி ஊனில் உயிராகி எவ்வுலகும்
தானாகி நின்றதனை அறிவது எக்காலம்?

விளக்கவுரை :

159. என்னை விட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க
உன்னை விட்டு நீங்காது ஒருப்படுவது எக்காலம்?

விளக்கவுரை :

160. இன்னதென்று சொல்லஒண்ணா எல்லையற்ற வான் பொருளைச்
சொன்னதென்று நான் அறிந்து சொல்வது இனி எக்காலம்?

விளக்கவுரை :


பத்திரகிரியார் பாடல்கள் 151 - 155 of 231 பாடல்கள்

151. பாசத்தை நீக்கி பசுவைப் பதியில்விட்டு
நேசத்தின் உள்ளே நினைந்திருப்பது எக்காலம்?

விளக்கவுரை :

152. ஆசார நேச அனுட்டானமும் மறந்து
பேசாமெய்ஞ் ஞானநிலை பெற்றிருப்பது எக்காலம்?

விளக்கவுரை :

153. பல்லாயிரம் கோடிப் பகிரண்டம் உம்படைப்பே
அல்லாது வேறில்லை என்று அறிவது இனி எக்காலம்?

விளக்கவுரை :

154. ஆதிமுதல் ஆகிநின்ற அரிஎன்ற அட்சரத்தை
ஓதி அறிந்துள்ளே உணர்வது இனி எக்காலம்?

விளக்கவுரை :

155. சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்?

விளக்கவுரை :
Powered by Blogger.