பத்திரகிரியார் பாடல்கள் 156 - 160 of 231 பாடல்கள்
156. அல்லும் பகலும் என்றன் அறிவை அறிவால் அறிந்து
சொல்லும் உரைமறந்து தூங்குவதும்
எக்காலம்?
விளக்கவுரை :
157. இயங்கும் சராசரத்தில் எள்ளும் எண்ணெ யும்போல
முயங்கும் அந்த வேத முடிவு அறிவது
எக்காலம்?
விளக்கவுரை :
158. ஊனாகி ஊனில் உயிராகி எவ்வுலகும்
தானாகி நின்றதனை அறிவது எக்காலம்?
விளக்கவுரை :
159. என்னை விட்டு நீங்காமல் என்னிடத்து நீ இருக்க
உன்னை விட்டு நீங்காது ஒருப்படுவது
எக்காலம்?
விளக்கவுரை :
160. இன்னதென்று சொல்லஒண்ணா எல்லையற்ற வான் பொருளைச்
சொன்னதென்று நான் அறிந்து சொல்வது
இனி எக்காலம்?
விளக்கவுரை :