பத்திரகிரியார் பாடல்கள் 161 - 165 of 231 பாடல்கள்
161. மனதைஒரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி
என தறிவைஅம்பாக்கி எய்வது இனி
எக்காலம்?
விளக்கவுரை :
162. என்னை இறக்கஎய்தே என்பழியை ஈடழித்த
உன்னை வெளியில் வைத்தேஒளித்து
நிற்பது எக்காலம்?
விளக்கவுரை :
163. கடத்துகின்ற தோணிதனைக் கழைகள் குத்தி விட்டாற்போல்
நடத்துகின்ற சித்திரத்தை நான்அறிவது
எக்காலம்?
விளக்கவுரை :
164. நின்றநிலை பேராமல், நினைவில்ஒன்றும் சாராமல்
சென்றநிலை முத்தி என்று
சேர்ந்தறிவது எக்காலம்?
விளக்கவுரை :
165. பொன்னும் வெள்ளியும் பூண்ட பொற்பதத்தைஉள் அமைத்து
மின்னும் ஒளிவெளியே விட்டு அடைப்பது
எக்காலம்?
விளக்கவுரை :