அழுகணிச் சித்தர் பாடல்கள் 1 - 5 of 40 பாடல்கள்
கலித்தாழிசை
1. மூலப் பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலப் பதியடியோ குதர்க்கத்
தெருநடுவே
பாலப் பதிதனிலே தணலாய்
வளர்த்தகம்பம்
மேலப் பதிதனிலே என் கண்ணம்மா!
விளையாட்டைப் பாரேனோ!
விளக்கவுரை :
2. எண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி
பஞ்சாயக் காரர்ஐவர் பட்டணமுந்
தானிரண்டு
அஞ்சாமற் பேசுகின்றாய்
ஆக்கினைக்குத் தான்பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா!
நிலைகடந்து வாடுறண்டி!
விளக்கவுரை :
3. முத்து முகப்படியோ முச்சந்தி வீதியிலே
பத்தாம் இதழ்பரப்பிப் பஞ்சணையின்
மேலிருத்தி
அத்தை யடக்கிநிலை ஆருமில்லா
வேளையிலே
குத்து விளக்கேற்றி என் கண்ணம்மா!
கோலமிட்டுப் பாரேனோ!
விளக்கவுரை :
4. சம்பா அரிசியடி சாதம் சமைத்திருக்க!
உண்பாய் நீயென்று சொல்லி
உழக்குழக்கு நெய்வார்த்து
முத்துப் போலன்னமிட்டு முப்பழமும்
சர்க்கரையும்
தித்திக்குந் தேனாமிர்தம் என்
கண்ணம்மா!
தின்றுகளைப் பாரேனோ!
விளக்கவுரை :
5. பைம்பொற் சிலம்பணிந்து பாடகக்கால் மேல்தூக்கிச்
செம்பொற் கலையுடுத்திச்
சேல்விழிக்கு மையெழுதி
அம்பொற் பணிபூண் டறுகோண வீதியிலே
கம்பத்தின் மேலிருந்தே என்
கண்ணம்மா!
கண்குளிரப் பாரேனோ!
விளக்கவுரை :