போகர் சப்தகாண்டம் 106 - 110 of 7000 பாடல்கள்
106. ஒப்பல்ல ஒப்பல்லதிந்து
பூரணந்தான் உண்மையாங் கனாயில்லை பாய்ந்திட்டாக்கால்
கப்பல்ல களங்கற்ற பூரணந்தான்
கரையற்ற நின்ற ஒளி மனபோதந்தான்
நிப்பல்லென்ற பெண்பிள்ளை
நாட்டநிறையற்ற நிர்க்குணந்தான் மௌனமாகும்
முப்பல்ல மோனமாஞ்
சமாதியுற்று முனைநாசியூடி குலமுத்தியாமே
விளக்கவுரை :
107. முத்தியாங் கானகத்தி
லிருந்தாலென்ன முகையாநாடுவீரின் வாழ்ந்தாலென்ன
தந்திராந் தானமென்ன மானமென்ன
சாவென்ன பிழைப்பென்ன சாந்தியானால்
வத்தியாம் வானமென்ன
அண்டமென்ன வாரிதியம் பொய்யாச்சு மனஞ்சொல்வானால்
புத்தியாம் பொய்யாமோ
கண்டதெல்லாம்பிறிதியுற்றசாங்கற்றால் பொய்யெண்பாரே
விளக்கவுரை :
[ads-post]
108. என்பதே கண்ணாரக்
கண்டதெல்லாம் எய்யாமற் காணாதே போனதென்ன
அன்பதே ஐயர்பதம் வாசிவைத்து
அடைந்தார்க்குங் காணுமது அசையாவிட்டால்
கண்பதே காணாது நடனந்தானும்
நலமாகப் பூணவே திகைநாதங்காணும்
துன்பதே சருதிமுடிந் திடமும்
சுத்தசைதன்னியம்தான் போதமாமே
விளக்கவுரை :
109. போதமே நோக்கவுந்தானெளிதோ சொல்லுபுக்கியே வாசிவைத்து நிலைத்துப்பாரு
நீதமே மௌனமாய் நிலைத்த உண்ணு
நிமையானதட்ணுற்ற அடுத்தடுத்த சாதகமேமுறையோடே
தப்பாதே நில்லு தப்பாமல்
பார்க்கவுந்தான்செயலோநந்தி ஒக்கமே
உன் செயலால் ஊடி வெளியாகும்
உருதிமுப்பாழ் வெளிதாண்டி முடிவுமட்டே
விளக்கவுரை :
110. முடிவுமப்பா உனக்குமே
வாதியொன்றில்லை மிக்கான பராபரமுமில்லை கண்டாய்
எடிவுமென்றுளிதுங்கொக்க
பின்னொன்றுமில்லை ஏகமென்பார் காணார்கள் எல்லையில்லை
துடிவு சொன்னவழி கேளு
சூட்சந்தன்னால் தூய்தானகண்டத்தின் மனவடிவைத்தார்
படிவு பண்ணி எட்டுண்ணாய் பகுந்தமுடிபரந்தான்
பயனறிந்து சாதிக்கவல்லோர்தானே
விளக்கவுரை :