போகர் சப்தகாண்டம் 96 - 100 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 96 - 100 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
96. திடமான நூல்தன்னில் செப்பினது சொல்லாய் தியங்காத சாரனைதான் கட்டுமார்க்கம்
குடமான கோடரியொடு சிராவனந்தான் கொடிதான பரிக்குருவும் செந்தூரங்கள்
தடமான லவனமொடு சத்தும்செம்பு தனியகந்த குளிகையொடு செந்நீராகும்  
கடமான திருகலமும் இனக்கூட்டந்தான் கடிதானமூலிமகா அவுஷதந்தானே

விளக்கவுரை :


97. அவுஷதமொடு வவுஷதவகை பதினேழும் அடங்களுஞ் சொல்லு ரெண்ணாயிரத்துள்ளே
வவுஷதமொடு ஏழுலட்சகிரந்தப் போக்கை இடித்தும் எண்ணாயிரமாம் என்பாட்டர்சொன்னார்
கவுஷதமெண்ணாயிரத்தைத் திரட்டித்தானும் கதித்த ஐயாயிரமாய் பின்புசொன்னார்
மவயஷத மூவாயிரமும் ஆயிரம்பின்பு சொன்னார்முந்நூறு முப்பத்து மூன்றென்றாரே

விளக்கவுரை :

[ads-post]

98. என்றாரே சாற்றினதோர் நூலேழில்தான் ஏழுலட்சம் கிரந்தத்தின் போக்கெல்லாந்தான்
கன்றாரே கரும்பான பாகுபோல் திரட்டி கருவெல்லாங் கண்டுணர்ந்த படியேசொன்னார்
தன்றாரே தந்தை காலாங்கிநாதர் தாமுமோசகல நூல்பார்த்துத் தேர்ந்து
அண்டாரே யகண்டம்போலஞ்சு காண்டஞ்சொன்னார் ஆயிரத்தெட்டு அண்டமெல்லாம் அலாவினேனே

விளக்கவுரை :


99. அலாவினேன் நூற்றறுபதா மண்டலத்தில் ஐயர்நந்தி சாஸ்திரமும் ஆராய்ந்துபார்த்தேன்
துளாவினேன் பாட்டருடனென்நூலை ஐயர்துதி செய்தேன்சுருதியாம்வாக்கியத்தை
கலாவினேன் காலாங்கி நூலைதானும் கருத்திருத்திச் சனகாதி நால்வர்நூலும்
விளாவினேன் ரிஷிசித்தர் நூலையெல்லாம் வெட்டவெளியாய் திறந்துவீசினேனே

விளக்கவுரை :


100. வீசினேன் ஏழுகாண்ட முடுக்காய் சொன்னேன் வெட்டவெளி யாகுதற்கு நிகண்டு சொன்னேன்
தூசினேன் சூத்திரந்தான் எழுநூற்று சொச்சஞ் சொல்லரிய நிகண்டதுவும் பதினேழுநூறு
பூசினேன் யோகத்துக்கு உறுதிசொன்னேன் பூட்டுகின்ற லட்சியத்தின் போக்குஞ்சொன்னேன்
ஓதினேன் மந்திரத்தின் உறுதிசொன்னேன் உறுதியாம் வாசியென்ற யோகந்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar