போகர் சப்தகாண்டம் 101 - 105 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 101 - 105 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
101. தானான காயத்தை யுறுதிபண்ணு தனித்தோடு வாசிவைத்து வைத்ததங்கே
பானேயெந்நேரமுந்தான் பழக்கமாகிப் பார்த்துத் தேர்ந்தாக்கால் தேகம்தூக்கும்
தேனாகத் தெளியாத காலத்தில்தான் தித்தோடுமெய்யாது சித்திக்காது
வானான வாசிவைத்து உரைக்காதார்க்கு மருவாது பூரணந்தான் வெளியாகாதே

விளக்கவுரை :


வாசியோகம்

102. வெளியான வாசியைத்தான் வரவழைத்து வீட்டுக்குள் அங்கங்கே வைத்திட்டுத்தான்
தனியாகவைத்திட்டுச் சாதித்தாக்கால் சாதித்தவாசியுமீசனும் ஒன்றாகும்
வளியாக வாசியைப்போல் சித்தொன்றுமில்லை மாசித்த சிவனவரும் வாசியொன்றில்
ஒளியாக வாசியது உயிரைமீட்டும் உறுதியாம் சிவயோகத் துண்மைதானே

விளக்கவுரை :

[ads-post]

103. உண்மையாய் இதைப்போல ஏதுலகில் சித்தி உத்தமனே மற்றொன்றும் இல்லையேதான்
பண்மையாய் பல்லயிராய் காலமெல்லாம் பார்த்தாலும் கிட்டாது பாரிலில்லை
துண்மையாய்ச் சொல்லுயர்ந்த வாசிதானும் சுருதிமுடிந்திட சூட்சமமாகும்பாரு
வண்மையாய் வாசிசித்த ரிஷிகள் யோகி வாசியைப்போல சித்தியில்லை பரிந்துநோக்கே

விளக்கவுரை :

104. நோக்கவே சோங்கினால் நுட்பங்காணும் நுணுக்கத்தில் வாதம்வந்து செய்திடாது
பார்க்கவே சோம்பிநீ நின்றாயானால் பாவம்தான் கிடையாது பாழாம்ஜென்மம் 
பூர்க்கவே வாசியைத்தான் விட்டாயானால் பிறவியாஞ் சாக்கிரத்தில் அழுந்திப்போவாய்
நீக்கவே வாசியைத்தான் நிறுத்திநோக்கு நிட்கனமாய் ஜோதியொளி யாகுங்காணே

விளக்கவுரை :


105. காணவே பரத்தினடி கண்ணேயாகும் காண்பதரிதுமே கண்ணெட்டதென்றீர் 
பாணவே பரத்தினடி யார்க்குமார்க்கம் பண்பட்ட கண்ணிரண்டு வைக்கமுனைமூக்கில்
காணவே காலசையாமல் நோக்கில் கதிக்கின்ற நாவிலொன்று சேரில் வெறும்பாழாம்
பாணவே மனோன்மணித்தாய் பட்டப்பகலாவாள் பகாரியாரவிகோடி ஒப்புமாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar