போகர் சப்தகாண்டம் 91 - 95 of 7000 பாடல்கள்
91. பாய்ந்திட்டேன் அண்டத்தில்
நுழைந்துபார்த்தேன் பலகோடிசித்தர்கள் வாசித்தார்கள்
ஆய்ந்திட்டு அனைந்திடும்
நூலார்தான் சொன்னார் ஐயனே எனக்கேட்டே னடிவணங்கி
காய்ந்திட்ட சிவன்தானும்
தாய்கண்டுசொன்னார் தனி ஏழுலட்சத்தை கரைகண்டுபார்த்தோம்
தோய்ந்திட்ட இந்தநூல்
பெருக்கமெத்த சுருக்காதே போனவென்ன வெனக்கேட்டேனே
விளக்கவுரை :
92. கேட்டதற்கு தரந்தான்
சொன்னார் சித்தர்தானும் கிரந்தத்தை சுருக்குவதற்கு சிவனாலுமாகா
மாட்டாதற்கு ஒன்றான
சாஸ்திரத்தின் மகத்துவமாஞ் சுருக்குண்டோ வென்றுகேட்டார்
சூட்டிதுக்குச் சித்தர்தான்
சொன்னமார்க்கம் சருமிச்சதொகுப்பெல்லாம் தெரிந்துபார்த்து
ஏட்டத்துக்குள் ஏழுலட்சம்
இயல்புதன்னை ஏற்றகல்லு வெட்டுபோல் இசைந்திட்டாரே
விளக்கவுரை :
[ads-post]
93. இசைந்திட்டார் ஏழுலட்சம்
இயல்பையெல்லாம் எளிதாய் ஏழாயிரம் இசைத்துவைத்தார்
பசைந்திட்ட நூலெங்கே
இருக்குதெனப் பகர்ந்தார் பாக்கானதெட்சண பாகத்தில்தானும்
அசைந்திட்ட நூற்றறுபதா
மண்டபத்தில் அமைத்துவைத்தார் சித்தர்கள் தான்பாரே
வசைந்திட்ட ஏடுதனில்
கருவென்ன சொல்லும் கருத்தை கடாட்சித்துச் சொல்லெண்பாரே
விளக்கவுரை :
94. என்றதோர் படிக்கின்ற நூலில்தானும் ஏற்றமாய்ப் பயனெல்லாம் சொல்லுவோமோ
வென்ற கண்டதோர் நூல்தன்னில்
சாரனேயுங்குருந்தான் சுருக்குமேபதினாறு அங்கந்தானும்
தின்றுமே எட்டெட்டு சித்தோடு
தியய்காமல் ஆதற்கேற்க ஏற்றுகிட்டார்
என்றுமே தேங்காமல்
தெங்குசிவயோகம் கனமான பூரணமும் மயிக்கம்பாரே
விளக்கவுரை :
95. அயிக்கமே பூரணத்தில்
தூங்காமல்தூங்கும் அன்பான சொருபத்தைக் காட்டும்பாரு
அயிக்கமே தூவாரார்
கையிலுண்டு அவருடைய பேர்தன்னை சொல்லுமென்றார்
கயிக்குமே வாசிக்கும்
குருவுமான காரணமாம் நந்தியர் காட்டும்நூலை
தியக்குமே சித்தருக்குங்
கொடுத்தார் நூலை திருமூலர் அரைந்ததை திடமென்பாரே
விளக்கவுரை :