போகர் சப்தகாண்டம் 76 - 80 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 76 - 80 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
76. பார்க்கவே உகாரமா நடுமையத்தில் பரிசுத்த ஒளியாகி உதிக்கும்பாரு
பார்க்கவே நிகராத நிர்மலன் தன்வடிவாம் பார்த்ததொரு வாசியைத்தான் அதற்குள்வைத்து
நேர்க்கவே ஓடாமல் நிறுத்திப்பாரு நிலையாத பிரவியரும் பூரணமுட்கொள்ளும்
ஆர்க்கவே யடிவாழ வேதாந்தத்தின் ஆதிபொருள் ஒருவர்க்கு அறியொண்ணாதே

விளக்கவுரை :


77. அறியொணா பிரமாந்திரம் என்றுபேரு அதிலுடைய நிறந்தானும் படிகவர்ணம்
நெறியொண்ணா காயத்ரியாகலின்னா நித்யநித்ய நிருபமாகும் நித்யசுத்த
பறியெண்ணாம் பரிபூரண சச்சிதானந்த பகாரிய நிரஞ்சன வித்துவங்கே
நெறியொண்ணா நிற்பாகா யதிமசியாம் மெறிவதனுசூட தம்பிரசோதயாதே

விளக்கவுரை :

[ads-post]

ஆராதார தெரிசனம் காயத்திரி

78. தேயென்ற யிருபத்தி நாலாய்நின்ற தெளிவான காயத்திரி தனைச்செயித்து
வாவென்று வாசியைநீ இருத்திவைத்து மனந்தன்னைப் போறவழி போகொட்டாமல்
தேயென்று இருத்தியே கும்பித்துக்கொண்டு சிற்சொருப காயத்திரி தணிற்செயிக்க
பூவென்ற பிறவியற்ற பூரணத்தில் லயிப்பாய் போக்குமில்லை வரவுமில்லை பொருளுமாச்சே

விளக்கவுரை :


79. பொருளாக மேலேறி துவாதசந்தான் போக்கோடே பதினொன்றாய் பிரித்துப்பாரு 
அருளான உன்மனையில் எட்டுசத்தி மருளான பரையொன்று பறந்தானொன்று 
தெருளான பதினொன்றுஞ் செப்பினேன்நான் செப்பரிது காரணந்தான் அடியேன்காணேன்
நருளான நந்தியேழாயிரத்தில் நாட்டினார் நல்லநீவை நான்காணேனே

விளக்கவுரை :


80. காணாத மார்க்கமெல்லாம் காணும்நேராய் கடுசாகமுனைமுகத்தில் கடிந்தால்சாறும்
வாணாதே யூணினால் பிடரிக்குள்ளே வுறுதியொடு நற்சிவமும் ருத்திரனும்காணும்
கோனாக குண்டலிகோத்தை நோக்கிக்கூர்ந்து பார்ப்பதினொன்று மொன்றுகாணும்
நானாதோடு மையம்நோக்கினாக்கால் நலமானகாலாந்தான் கோடிப்பானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar