போகர் சப்தகாண்டம் 71 - 75 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 71 - 75 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
71. தளவாயை கண்டாக்கால் சம்சயந்தான்தீரும் சங்கற்பவகற்ப மென்ற சட்டைநீக்கும்
தளவாயை கண்டாக்கால் தாயோடே சேர்ப்பார் சச்சிதானந்தத்தின் தன்மைகாண்பார்
தளவாயை கண்டாக்கால் சகலசித்துமாகும் தனைவானோடொத்த கள்ளனைந்து நிறமாகும்
தளவாயை ஐம்பத்தொன்றில் காணாதப்பா சாங்கமாயரைத்து நீ வாசிமாட்டே

விளக்கவுரை :


72. உரைத்துமே ஆக்கினையாஞ் சாக்கிரத்தில் உகந்துமே மனோன்மணியை உச்சரித்து
மரைத்துமே மந்திரத்தை சொல்லக்கேளும் மருவு கா ஏ இன் கூ ஆகல இரியுமாகும்
அரைத்தும் அசைகன் இரியுமாரு அதின்பின்பு அதிகழாயிரமமாகும்
உரைத்தும் மூக்கண்ட பஞ்சதேசாவிது உச்சரியே முனிந்துமேயுச்சரித்து மூட்டுநீயே

விளக்கவுரை :

[ads-post]

73. மூட்டியே தாயாருட பதத்தைக்கண்டால் முஷ்காரமாய் கையெல்லாம் ஒருந்துட்போகும்
நாட்டியே யெடோட நாலுங்கூட்டி நாதாந்த சித்தயெல்லாம் சணத்திலாகும்
மாட்டியே தமருக்குள் புகுதலாகும் மயிர்ப்பான நெருப்பாறு கடக்கலாகும்
நீட்டியே நிராதாரம் அறியலாகும் நிச்சயமாய்க் குடுகளெல்லா நினைக்கலாமே

விளக்கவுரை :


74. நினைக்கவே ஐம்புலனும் ஒடுங்கிப்போகும் நோய்மூப்பு சாடுநரை திரையும்போகும்
கனைக்கவே காயசித்தி வாதசித்துங் காணும் கண்ணிமைக்குள் போற்றுயிர் கடிகிமீளும்
அனைக்கவே சாக்கிரத்தில் இருந்துகொண்டு ஆயியொடு அப்பனுந்தான் கூத்தும்பார்த்து
தனைக்கவே சரியொடு கிரிகையோகம் சார்ந்ததோர் ஞானமெல்லாம் தானானாரே

விளக்கவுரை :


75. தானான மனோன்மணியைத் தாண்டியப்பால் தணிந்ததோ ரெட்டுவிரல் மேலேகேளு
கோனான குருபதந்தான் கூட்டிப்பாரு குறிப்பான புகழ்காணார் ஆயிரத்தெட்டு
ஆனான நடுமையம் ஐங்கோணமாகும் அகராமாமகாரமொடு மகாரமாகும்
நானான நாதமொடு விந்து அஞ்சும் வந்தமந்தாம் ஐங்கோணத்தில் நிற்கும்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar