போகர் சப்தகாண்டம் 66 - 70 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 66 - 70 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
66. திறமையோ புரிசையொடு உண்ணப்பண்ணும் சீவகளை இருந்துகொண்டு எட்டுநாளாய்
புறமையா இருந்துகொண்டு நாவும்பாழாய் புத்தியுள்ள சீவகளை மதிபோல்தேய்ந்து
நலுமையாய் நறைதிறையாய்ச்சேரமாண்டு நலமான ஜீவகளை போகுவதைக்காணார்
குறமையாம் நாதமது கண்டத்திற்காணும் குறிப்பான திரோதகையின் கூற்றுதானே

விளக்கவுரை :


67. தானான வாய்வுட வீட்டில்நின்று தம்பித்து ஆத்தாளைத்தான் விலங்குபூட்டி
போனான சந்திரன் மண்டலத்தில்பூவால் போற்றியே அடிவணங்கி வாசிபூட்டி
தேனான மேலேற வழிதாவென்று சுத்தசைதன்னிபத்தைத் தோத்தரித்து
வானான வாதசித்தி யோகசித்தி மகாசித்தி யோகசித்தி மார்க்கங்கேளே 

விளக்கவுரை :

[ads-post]

68. மார்க்கமாய் மந்திரத்தை யுன்னியுன்னி வாசியைநீ மறவாமல் மருவியூட்டி
ஆர்க்கமாய் வங்கென்று கும்பித்துநிற்கில் ஆத்தாளும் அய்யருமே யுளமகிழ்ந்து
மார்க்கமாய் வாதத்தின் வழிதான்சொல்லி வரிசையோடேறுதற்கு வழியுஞ்சொல்வார்
ஊக்கமாம் மஹேஸ்பரத்தின் பதியைவிங்கு உயர்ந்தேறி பதினோரங்குலமேலேயேறே

விளக்கவுரை :


69. மேலேறி இரண்டு புருவமத்தியில் மிகையான அண்டம்போல் நிற்குமப்பா
மேலேறி வட்டமாம் வீடுபோலே வளையமொன்று ரெண்டிதழ்தான் எரஷரிவாகும்
ஆலேறி ஆங்கென்ற அட்சரந்தான் நடுவே ஆகாசபூதமாம் பூதபீசம்
மானேறி மனோன்மணியும் சதாசிவனும் நிற்பார் மவத்தைதான் சாக்கிரத்தின்வீடுமாமே

விளக்கவுரை :


70. வீடுமாம் வர்ணமது மேகவர்ணம் விலங்குகின்ற தொழிலதுதான் காமம்குரோதம்
வாடுவாம் லோபமொடு மோகமாகும் மதமாச்சரியத்தோடு அஞ்சாகும்  
நாடுநான் முகன்மாலுஞ் சிவன்மஹேஸன் நலமாக காப்பார்கள் திகைத்துதானும்
தானுசதாசிவன் தானும் தளவாயாருந் தளவாயை கண்டாக்கால் சகலமாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar