போகர் சப்தகாண்டம் 61 - 65 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 61 - 65 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
விசுத்தி

61. ஏறியே பனிரெண்டங்குலமே தாண்டி ஏத்தமாம் விசுத்தியென்ற தலமுமாகும்
மாறவே அருகோணவளையமொன்று மகத்துவமாம் பதினாறு இதழுமாகும்
ஆறவே இதழுக்கு அட்சரந்தான் அஆஇஈஉஊ வாமதுரவெயிரோ இல்லோ
துனையான எ ஐ ஒ ஔ அம் அம் ஆமே

விளக்கவுரை :


62. ஆம்முதலாய் பதினாறுஎழுத்துமிட்டு அறுகோண நடுவேதான் வகாரம்நிற்கும்
வாமுதலாய் மஹேஸ்வரனும் மஹேஸ்வரியும் நிற்பார் மகத்தானசொப்பணத்தின் இருப்புமாகும்
பூமுதலாய் பூதமதுவாயுமாகும் புகழானபீசமது அங்குமாகும்
நாமுதலாய் தாணவேதாந்தானாகும் சபலமனோவேகமாய் நாடலாமே

விளக்கவுரை :

[ads-post]

63. நாட்டமாய் இவருடைய தொழிலுநன்றாய் நடத்தலொடு ஓட்டல்மயங்கிக்கிடத்தல்
நீட்டமாய் நிறுத்தலொடு கலங்காமலிருத்தல் நிலையஞ்சின் விபரத்தை நிலைக்கக்கேளு
பூட்டமாய் பொசித்தலொடு ராகங்கேட்கல் பொங்கியே கோபஞ்சண்டை சினமடைத்தாங்கல்
ஓட்டமாய் ஓங்காரம் உன்னைக்கண்டால் உயர்வாயை திறந்திடுதல் உருதிகாணே

விளக்கவுரை :


64. உறுதியாம் ருசியாறு வாயினுள்ளே உரிசைதான் வாயினுக்கு பாலுமில்லை
பறுதியாம் பரமென்ற பீடமப்பா பரத்தி என்றுமோர் பண்புமாகும்
கிறிதியாமைப் பொறியின் கணையைவாங்கி பிசகாமல் நாலதனிலொக்கசேர்த்து
அறுதியாம் ஆதாரமெல்லாம் பார்த்து அப்பனே நாலுக்குள் அனைத்திடாயே

விளக்கவுரை :


65. அனைத்திட்ட நாலுக்குள் சிங்கென்றூணு ஆதியாம் ஓம்நமசிவாயாவென்றே
துளைத்திட்டு வாசியைநீ வாயிலூட்டில் சுருக்கிட்டு கட்டிடவே ஓடாதப்பா
பழைத்திட்டு பதினாறு தலத்தில்தானும் பாங்கான சீவகளை இருப்புமாகும்
தினைத்திட்ட சீவகளை இருந்தத்தானே சிறப்பாக பாடிவிக்கும் திறமையாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar