போகர் சப்தகாண்டம் 56 - 60 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 56 - 60 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
56. தூங்கவே எழுப்பிமெல்ல பெண்ணைசேர்க்கும் சுகமஞ்சுஞ்சிவன்கைக்குள் தொழில்தானப்பா
ஓங்கவே ரத்தினசிம்மாசனமுமாகும் உமாசத்தியாகுமடா அஸ்திமாலை
மாங்கவே மான்மழுவும் வரிப்புலித்தோல் மகரகொடி சூரியப்பிரகாசமாகும்
தாங்கவே தேவதேவா சர்ப்பாசனம்தரித்த தாயார்தாமே

விளக்கவுரை :


57. தாமென்றே தியானித்து வாசியைநீவைத்து தம்பித்து ஓம்அம்அம்உம் சிவாயநமாவென்று
ஓமென்று உன்னியே உத்தமிதாய்பதத்தை உறுதியாய் மனந்தன்னை ஓங்கப்பண்ணி
ஆமென்று ஐம்புலனை பறிவாய்தள்ளி ஆதிஅந்தமில்லா தாயே என்று
காமென்று கடாட்சித்து அருள்தாவென்று கருத்தாகமனந்தன்னை ஒளியில்வையே

விளக்கவுரை :

[ads-post]

58. ஒளியான நந்திவாகனமுமாகும் ஒருசாமவேதத்தி னுருப்புமாகும்
கனியான காமப்பால் மாச்சல்செய்து கடுநரையுந் திரையோடு கண்புகைச்சலாகி
வெளியான சடமழிந்து விந்தையூற்றி வெறுங்கூத்தாய் ஞானமெல்லாம் விழலாய்ப்பண்ணும்
கொளியான இவருடைய கூத்தையெல்லாம் கண்டுகும்பித்து குறியோடேகூர்ந்திடாயே  

விளக்கவுரை :


59. கூர்ந்திட்டாடு வளையில் காந்திதானும் கூகைக்குமாக்காலம் குறிகண்டாப்போல
ஆர்த்திட்டு அவர்பதத்தில் மனவிலங்குமாட்டி அறிவோடே அசையாமல் அடற்குள்நின்று
ஏர்ந்திட்ட ஏறுதற்கு வழியைக்கேட்டு எட்டெட்டு சித்திக்கும் இயல்புவாங்கி
வார்த்திட்டு வாதத்தின் இனங்களெல்லாம் கேட்டு வகையான காயசித்தி மார்க்கங்கேளே

விளக்கவுரை :


60. கேளுமே சந்திரமண்டலத்தில் புக்கி கெடியான மலர்வாங்கி பதத்தில்வைத்து
தேளுமே சிவனோடு சத்திக்குந்தான்சிதையாமல் மனந்தன்னை திருவடிசேவித்து
வாழுமே மந்திரத்தையுன்னியுன்னி வாசியைநீ மறவாமல் மருவிப்பூட்டி
மாளுமே நீயகற்றித் தூயதீபமாறச் சித்துவிடைதானே சுருக்காயேறே

விளக்கவுரை :

போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar