போகர் சப்தகாண்டம் 81 - 85 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 81 - 85 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
81. பானான நூல்சொன்னபடி கேட்கும் பரந்தோடும் வாசியொடு பழகினாக்கால்
வானான வார்த்தையால் பார்த்திட்டாக்கால் வளமாக காயத்திரி யோகித்தாய் தானும்
கானான காய்க்குமே தேங்காய்தானும் கனமான யோகசித்தி பார்க்குங்காலம்
கோனான பறத்தினுட முலவைப்பாரு குடியிருந்த வாசியுடமுறையைக்கேளே

விளக்கவுரை :


82. கேளுநீ மூலத்தில் குமட்டுவாகரத்தை கீழமர்த்தி சிகாரத்தை போகாமல்ரேசி
நீளுநீ ரேசித்துப் பூரித்துப்பாரு நிர்மலமாம் குண்டலியில் நந்திதானும்
வாளுநீ நந்திவந்து வசனிப்பார்பார் மகத்தான சித்தியெட்டு ஞானந்தானும்
நாளுநீ வாசிவைத்து மந்திரமகாரத்தை நலமாக கண்டிட்டே நாட்டிடாயே 

விளக்கவுரை :

[ads-post]

83. நாட்டிட்ட மூலத்தைத் தாண்டிப்பின்னர் நலமான கஞ்சனுபதியிற்கூட்டி
ஒட்டியே வகாரத்தை உருத்திநோக்கி ஒளியான சிகாரத்தால் உள்ரேசிக்க
பாட்டியே பண்டான பிறவியறலாகும் பண்பாக நான்முகனைக் கண்டதாலே
மாட்டியே கஞ்சனுட பதியைத்தாண்டி மாவிருக்கும் மதியூடி மருவிநில்லே

விளக்கவுரை :


84. மருவியே வகாரத்தை யுட்பூரித்து வாதமாஞ்சிகாரத்தை உள்ளே ரேசி
பருவியே பஞ்சநரை யெல்லாம்போக்கிப் பாலனுமாய் பதினாறுவயசுமாவார்
உருவியே யாங்கடந்து ருத்திரன்தன்பதியில் உணர்வான வாசியைநீ உருத்தித்தாக்கு
தருவியே சிகாரத்தை உள்ரேசிக்கச் சடந்தானும் சிவப்போடி சித்தியாமே

விளக்கவுரை :


85. சித்தியாம் ருத்திரன்தன் பதியைத்தாண்டி தெளிவான மஹேஸனுட பதியில்புக்கி
அத்தியாம் வகாரத்தை அசையாமல்பூரி யதுக்குள்ளே சிகாரத்தை உள்ரேசிக்கப்
பத்தியாம் சிறுபிள்ளை தானாவார்கள் பாருடலுங்கை நெல்லிக்கனிபோலாகும்
துத்தியாம் சிவயோகம் வைத்துப்பாரு துடியாகும் குளிகையெல்லாம் சுருக்கிலாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar