போகர் சப்தகாண்டம் 86 - 90 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 86 - 90 of 7000 பாடல்கள்

[ads-post]
86. சுருக்கான மஹேஸ்பரத்தின் பதியைத்தாண்டி சூ என்றசதாசிவமிடத்தே காலையூன்றி
மகத்தான சிகாரத்தை வைத்துப்பாரு மகத்தான சித்தோடும் கெனனமாகும்
செருக்கான மனோன்மணி மாதாவின்பாதம் திரமானவாசிவைத்துப் படியேபார்க்க
பெருக்கான மெய்ஞான நிராதாரந்தான் செய்வான வாசினைதான் தானும்நீயாமே

விளக்கவுரை :


87. நீயான குருபதத்தில் நின்றாயானால் நிலையான சிவயோகவாசிஓட்டு
தாயான பூரணமும் சகலதெரிசனமாஞ் சதமான வகரசிகாரத்தின் மார்க்கம்
வயலான வலுவைத்தான் வைத்துமங்கே மதியோடேபார் மகத்தானசித்தி
தீயான நீக்கவிட மற்றுநின்ற சிறந்திடுமே பூரணந்தான் சித்துமாதே

விளக்கவுரை :

[ads-post]

88. சித்தாகப் பாய்ந்தேன்நான் அண்டந்தன்னில் தெளிவான அண்டத்தின் சித்தஞ்சொன்னார் நந்தி
அத்தாக அண்டியஞ்சலித்து அடுக்காக அதுதாண்டி யிருந்ததுதான் நடுவுமாகி
பத்தாக துனையென்றார் பட்டார்தாமும் பாலித்தார் ரூபத்தை வாறவைத்து
கத்தாக மலினியை காத்தில்கட்டி கனல்ஜோதி யண்டம்போல் நுழைந்திட்டேனே

விளக்கவுரை :


89. நுழைந்திட்டே நிருவிகற்ப நிறையானயோகி நேரஞ்சு தனித்தனியே கோடிசித்தர்
குழைத்திட்டு தெவிட்டாதே பார்த்துநின்றேன் சித்தாணியுனக் கெந்நாளாச்ச தென்றார்
குழைந்திட்டு கொடியறுத்து மாச்சுதென்றேன் நுறியதளஞ்சித்திப் பாரென்றார்கள்
மழைத்திட்டு நுழைந்தேன் பின்னோரண்டத்தில் மகத்தான சித்தர்க்கு கைகூப்பினேனே

விளக்கவுரை :


90. கைகூப்பி கட்டியதோர் பதுமைபோலக் கையினால் தடவினேன் கைதட்டாது
கைகூப்பி நீள்சாரடைந்தயோர் களரியோரைக் கண்டுநானஞ்சி வலம்வந்தேன்
கைகூப்பி பரிவான அடுக்கொன்று தன்னில் பாய்ந்தேநான் முடியேறிபரிந்துபோந்தேன்
செய்கூப்பி அண்டமெல்லாம் சோதித்தேநான் சுருக்காக மறுவண்டம் பாய்ந்திட்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Pogar, Pogar 7000, Siththar