போகர் சப்தகாண்டம் 156 - 160 of 7000 பாடல்கள்
156. மவுனமாம் மூலத்தில்
முந்திமுந்தி மருவினால் பளிச்சென்று லிகிதங்காணும்
நிவுனமாலிங்கமது நந்தியாக
நேராகயெட்டிதழும் விரிந்துகாணும்
உவுனமா மகத்தைவிட்டுச்
சுழிமுனையினூடே ஓகோகோ அநாகதத்தில் மவுனமெட்டு
சவுனமா மசைந்துநித்த
மவுனத்தாலே சிரசுசடை யசைந்தாட நடனந்தானே
விளக்கவுரை :
157. காணப்பா மேலேறி
யக்கினியினுள்ளே கருத்தாகி மவுனத்தை தாக்கினாக்கால்
நீணப்பா சதாசிவன்தான்
நிர்த்தஞ்செய்வார் நிலையாக சிவகாமி யிருந்துபார்ப்பாள்
ஆணப்பா யவனிடத்தில் கவர்ந்து
நித்தம் அனுகினாலம்பலத்தி னடையலாகும்
மூணப்பா வதைவிட்டு
அறிவின்மூலம் முதிர்ந்தேற வாசியுடமுறையைக்கேளே
விளக்கவுரை :
[ads-post]
158. முறைமையாய் நடுவில்
மவுனமூன்றி முதிர்ந்துமனமேறவிட்டுத் திறமாய்நில்லு
திறமையாய் அறியவென்றால்
எழில்சேரமைந்து ஏறுவதும் தவறுவதும் மனதுக்குள்பாரு
அருமையாய் அறிவினுடமூலங்
கண்டால் அசடில்லா கற்பூரதேகமாச்சு
செருமையாய் ஆலயத்துள்
சிவன்தான்வந்து திரட்டியன்னங்கொடுக்கையிலே யுண்ணலாமே
விளக்கவுரை :
159. உண்ணலாமென்று நித்த
மூலத்துள்ளே உறுதியாய் ஒவ்வொன்றாய் உரைத்துக்காணும்
எண்ணலா மினத்தோடோ
வரிசையோடேயே மாறலில்லாமல் எத்தியாடு
கண்ணலாம் அட்சரத்தில்
கருத்தைவைத்துப்பாருச் சுருதிநின்ற மந்திரத்தைச் சேர்த்துவுண்ணு
பொன்னலாம் புலன்தன்னை
யவரவர்களிருக்கும் பேரானவீட்டில்வைத்துப் பூட்டிப்போடே
விளக்கவுரை :
160. பூட்டிட்டு நாலாக
வெளியினுள்ளே புகழ்நின்ற ஜோதியைப்பார் பொருளே தோன்றும்
கூட்டிட்டு ஒவ்வொன்றாய்க்
கடிந்துகூடும் கொள்கியதோர் மூன்றாந்தா னறைதானுள்ளே
மாட்டிட்ட மேற்கண்ணின்
மணித்தாயப்பா மருவிநின்ற கொலுக்காண கண்ணுண்டோசொல்
மீட்டிடும் மேலான
புத்திதானுஞ்சென்றால் வேதாந்த முடிவான வெளியுமாச்சே
விளக்கவுரை :