போகர் சப்தகாண்டம் 211 - 215 of 7000 பாடல்கள்
211. தீபொளிதான் பளிச்சென்றால்
பிரண்டையிலேவூது சிந்தித்தால் யோகமதுசித்தியாச்சு
சரவொளியாம் குமபகம்
மூளைக்கேறாது கொடிதான வாயுவங்கே மவுனமாகும்
சரவொளிதான் சமைப்பதற்குத்
தீயும் வேண்டாம் சமர்த்தான சிகாரத்தை யூதப்பற்றும்
சூழொளியாஞ் சுழித்தியங்கே
நெடும்பாதையோடு சுளுக்காக இம்முறையை ஆடிப்பாரே
விளக்கவுரை :
212. ஆடியங்கே பார்ப்பதற்கு
முறையைக்கேளு ஆடவெல்லாம் சொல்லுகிறேன் அறிந்துகொள்ளு
ஈடியங்கே இடகலையால்
பூரித்துநின்று எழிலாக மூலத்தே நினைவாய்க்குமாயின்
நீடியங்கெ
பின்கலையினுள்ளேரேசி நேர்ப்பாக நேர்ப்பாக யேத்திவாநீ
தூடியங்கே விரைத்தாக்கால்
சுத்திநாடி திறமான வாதபித்தம் சிலேத்தமமும் போமே
விளக்கவுரை :
[ads-post]
213. திறமான மூன்றுவகை
நோயும்வெந்து சித்தியாய்க் காயந்தான் இருக்கும்நன்றாய்
நலமான நல்வினையும்
தீவினையும் தீரும் நலியான ஐம்புலனும் விரைந்துபோகும்
உறவான ஓங்கார நாதத்தாலே
ஒருகோடி இடிபோலே ஓங்குமோங்கும்
அறமானது இப்படியே
அனைஞ்சுகண்டேன் அறிந்துமே நாங்கள் இப்படிதான்பாரே
விளக்கவுரை :
214. பாருநீ யவ்வென்றாலும்
புக்கூடும் பரவிதோர் மகாரமதில் சேர்ந்து நின்றால்
ஊருநீ உகாரமாய் மேலேயேறும்
இதுகாணும் பிரகாசம் என்றமார்க்கம்
நாருநீ பளிச்சென்றால்
நந்தியாக நயமாக இதினோடே வாசிசேரு
ஆருநீ அட்சரமும் மகாரத்தோடு
அனைந்ததோர் வாசிரெண்டு நாதவிந்தே
விளக்கவுரை :
215. நாதமென்றும் விந்துவென்றும்
வாசிக்கபேரு ரவிமதியும் சிவசத்தி என்றுபேரு
வாதமென்றும் வசியமென்றும்
அதுக்கேபேரு மனமென்றும் போதமென்றும் இதுக்கேபேரு
நீதமென்றம் பூமியென்றும்
இதற்கேபேரு நிலையான வேகமென்றும் கந்தமென்றும் நேரு
காதமென்றும் தாரமென்றும்
இதற்கேபேரு கண்ணொளியாய் நின்றது இரண்டும்தானே
விளக்கவுரை :