போகர் சப்தகாண்டம் 226 - 230 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

226. கலறவே புருடனையந் திட்டமான மாகக்கலந்துநின்ற அறைதன்னியமாகக்கண்டு
ஒலறவே கருத்தழிந்து ஒன்றேயாகி உன்னனாயின் காற்றசையா விளக்குபோல
அலறவே அலைச்சலற்றுத் தானேதான் ஆயகண்ட மெய்ப்பூரணமாய் நின்றுபின்னை
துலறவே தேகமற்று இருப்பதாலே சுத்தமாம் தத்துவல்ப சமாதியாச்சே

விளக்கவுரை :


227. சமாதியாம் சல்விகற்ப சமாதிகேளு தனித்தனித்தான் இரண்டுவகை அதிலேயுண்டு
சமாதியாம் சத்தானு வித்தையுண்டு தரிப்பான திரிசானு வித்தையொன்று
மெமாதியாம் சத்தானு வித்தைமார்க்கம் பெரியதொரு தத்துவ சமாதிக்குத்தான்
மமாதியாம் சத்தங்கள் பட்சியோசை படுகிறது உன்மனத்தை பாருமங்கே

விளக்கவுரை :

[ads-post]

228. பருவமாம் சத்தானு வித்தையொன்று படிப்பான சல்விகற்பம் என்றுபேரு
திருவமாம் திரிசானு வித்தைமார்க்கம் சூட்சியாய் அந்தநிலைக்குள்ளே நின்று
தருவமாம் தன்னை அனுசந்தானம்பண்ணி சஞ்சரிச்சு திரிசானு வித்தையாகும்
அருவமாம் சல்விகற்ப சமாதிமார்க்கம் மருவியதோர் சஞ்சாரத்திருக்கில் பாரே

விளக்கவுரை :


229. பாரென்ற நிருவிகற்ப சமாதிகேளு பாங்கான தத்துவநிலை சமாதிமுத்தி
காரென்ற சத்தானு வித்தைமுத்தி தன்னைத்தான் மறந்து தூக்கமுறு மயக்கம்போல
வாரென்ற பிறசத்தம் காதில்கேளா மருவியந்த பூரணத்தே லயித்துநிற்கும்
நேரென்ற அசைதன்னியமாகப்போனால் நிருவிகற்ப சமாதியென்ற நேர்மையாச்சே

விளக்கவுரை :


230. நேர்மையாய் சமாதிவிட்டு சஞ்சரிக்கையில் நினைவாகச் சமாதியிலே இருக்கும்போது
தீர்மையாய் பக்கானமென்ற திரையத்துள்ளும் சிதைந்த பிரபஞ்சமெல்லாம் பொய்யென்றெண்ணு
வேர்மையாய் விவகாரத்தாலே தோன்றி விரிந்த பிரபஞ்சத்தின் பாசந்தள்ளி
நேர்மையாய் நிருவிகற்ப மாகநின்றால் நெளிவான நிருவிகற்பம் இதுவேயாச்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 221 - 225 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

221. பிறவாமல் ஞானத்தில் கூடுகூடு பிறத்தியாந் தூரமல்ல புகுந்தாராகில்
மறவாமல் எந்நாளும் வாழ்வாய் நீதான் மாசற்ற நாளைப்பார் சக்கோடாது
கறவாமல் கண்டததை வைத்துக் கனிந்துமே யோடுறதை ரகடுகிப்ப
நறவாமல் கைக்கனிபோல் நாலும்தோன்றும் நாதாந்த மணித்தாயும் அழைப்பாள்பாரே

விளக்கவுரை :


222. பாரென்ற நாலையே பார்க்கவென்றால் பண்பாக வகையெல்லாஞ் சொல்லக்கேளு
கானென்ற காலையேமாலைக்கண்டால் கடியதோர் கூட்டங்கள் கலக்கவேண்டாம்
நானென்ற நிசியான நடுசாமத்தில் கலங்காமல் அசைவற்று இருந்துபாரு
கோனென்ற கோலத்தைக் கூட்டிப்பார்த்துக் குறுமுனியாந்தலத்தில் நின்று குறித்துநோக்கே

விளக்கவுரை :

[ads-post]

223. நோக்கியே நிலைத்துநின்று அகண்டத்துள்ளே நுட்பமாம் அட்சரந்தான் பதினார்தன்னில்
ஓக்கியே ஒன்றிதின்றால் உயிரேயாகும் உள்ளாறில் வகாரம்நிற்கும் சாவுபொய்யாம்
நாக்கியே கைக்கெட்டா நாலுங்காணும் நாலதனிலே நின்று வாசியோட்டி
மூக்கியே தாய்காண்பான் மூன்றும்வீதி முப்பாழெல்லாம் வெளியாம் முன்பின்னாமே

விளக்கவுரை :


224. பின்னாகப் புக்கியிரு யென்பாள் தாயும் யோர்தமொழி யிருவென்ற சொல்லைக்கேட்டு
முன்னாகக் குதிரைநான்பாகத்தோரணன் மூலமாம் ஆதாரமெல்லாம் காணேன்
கொன்னாகக் குருவென்ற மொழியுங்காணேன் குறித்திட்ட பொறியோடு நெறியுங்காணேன்
மன்னாக மறுவென்ற தாயுங்காணேன் மட்டற்ற போதத்தில் உன்னினேனே

விளக்கவுரை :


225. உன்னியே சமாதி ஐந்தின் உறுதிகேளு உகப்பான தத்துவம் யசாதியென்று 
முன்னியே தத்துவங்கள் முப்பத்தாறும் முனிந்து அகலாப் பூதங்கள் ஐந்தாகும்
துன்னியே சூட்சுமத்தில் தானடக்கி சூட்சுமத்தை நம்பெரிய வாசன்போலாக்கி
கன்னியே காரணமாஞ் சரீரத்திடைக்கிக்கருதி இதைப்பிரகிருதியிலே கலறப்பண்ணே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 216 - 220 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
216. இரண்டையும்தான் உற்றுப்பார்க்கப் பார்க்க நிறையற்று உறையற்று உணர்வுமற்று
அண்டையுந்தான் நல்லற்றுப் போனதெல்லாம் மடங்கிற்று உட்புகுந்த அந்தநாவில்
தண்டையுந்தான் சித்தொத்துத் தெளிவுமொத்து செயலற்ற நிஷ்களமாய்க் காணுங்காணும்
பண்டையுந்தான் பற்றற்றசிற்பரந்தான் பணிந்திடும் என்றுசொல்லி பகர்ந்திட்டானே

விளக்கவுரை :


217. பகர்ந்திட்ட வாசியது என்றபேச்சு பண்பாக வாய்க்கும்மெத்த எளிதோசொல்லு
திகர்ந்திட்டதேசிதான்ஞானதேசி சேர்நதிதைத்தான் மனமொத்து ஏறுவோர்க்கு
புகர்ந்திட்ட புருவத்தில் நின்று ஆடும் மனோன்மணியாம் பெண்ணைப்பாரு
இகர்ந்திட்ட காசிகங்கையமுனையூன்று மேகமாய்க் கண்டுந்தான் புருவமென்னே

விளக்கவுரை :

[ads-post]

218. என்னவே சிகாரமது நெருப்பாரம்மா  இசைந்துநின்ற வகாரமது மயிர்ப்பாலமாம்
உண்ணவே இரண்டும் விட்டால் ஒன்றாயொன்றில் சிகாரத்தையொளிக்காண்டு
மன்னவே யோகாரமும் தில்லசவுமுந்தும் வருந்தியே இதுநன்று கள்ளகன்று 
தன்னவே இரணடொளித்தான் சாந்தியாவான் தனித்திரண்டுமாறுக்குந் தள்ளநன்றே

விளக்கவுரை :

219. நன்றான சிகாரத்தில் கோபமெய்து நானென்ற ஆணவத்தால் ஆங்காரம் தாக்கும்
ஒன்றான ஈதிரண்டும் பெரியோரையா பிறப்பதற்கும் இறப்பதற்கும் பெரியவித்து
உண்டாட உகாரமது உடனேயாச்சு ஓங்கியதோர் சிகாரமது வரைந்தேபுக்கி
என்றான பிறப்பிறப்பும் இரண்டமாச்சு எழுத்திரண்டும் ஏத்தமாய் இருத்திப்பாரே

விளக்கவுரை :


220. இருத்தியே பாரென்று சொன்ன ஏத்தமாங் காலாங்கி ஐயர் தாமும்
பருந்தியே பக்குவம் பார்த்தெனக்குச் சொன்னார் பாரென்றார் வாசியைத்தான் பூரணத்தில்லயிக்க
மருந்தியே கண்ணிமைக்குள் வாயில்வந்து கலங்கும் மருவிரண்டும் பிறந்திறந்து வித்திதென்றார்
மறித்துமே மவுனத்தை விடாதேயென்றார் மகத்தான விதுரண்டால் பிறப்புமாச்சே

விளக்கவுரை :




போகர் சப்தகாண்டம் 211 - 215 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam
211. தீபொளிதான் பளிச்சென்றால் பிரண்டையிலேவூது சிந்தித்தால் யோகமதுசித்தியாச்சு
சரவொளியாம் குமபகம் மூளைக்கேறாது கொடிதான வாயுவங்கே மவுனமாகும்
சரவொளிதான் சமைப்பதற்குத் தீயும் வேண்டாம் சமர்த்தான சிகாரத்தை யூதப்பற்றும்
சூழொளியாஞ் சுழித்தியங்கே நெடும்பாதையோடு சுளுக்காக இம்முறையை ஆடிப்பாரே

விளக்கவுரை :


212. ஆடியங்கே பார்ப்பதற்கு முறையைக்கேளு ஆடவெல்லாம் சொல்லுகிறேன் அறிந்துகொள்ளு
ஈடியங்கே இடகலையால் பூரித்துநின்று எழிலாக மூலத்தே நினைவாய்க்குமாயின்
நீடியங்கெ பின்கலையினுள்ளேரேசி நேர்ப்பாக நேர்ப்பாக யேத்திவாநீ
தூடியங்கே விரைத்தாக்கால் சுத்திநாடி திறமான வாதபித்தம் சிலேத்தமமும் போமே

விளக்கவுரை :

[ads-post]

213. திறமான மூன்றுவகை நோயும்வெந்து சித்தியாய்க் காயந்தான் இருக்கும்நன்றாய்
நலமான நல்வினையும் தீவினையும் தீரும் நலியான ஐம்புலனும் விரைந்துபோகும்
உறவான ஓங்கார நாதத்தாலே ஒருகோடி இடிபோலே ஓங்குமோங்கும்  
அறமானது இப்படியே அனைஞ்சுகண்டேன் அறிந்துமே நாங்கள் இப்படிதான்பாரே

விளக்கவுரை :


214. பாருநீ யவ்வென்றாலும் புக்கூடும் பரவிதோர் மகாரமதில் சேர்ந்து நின்றால்
ஊருநீ உகாரமாய் மேலேயேறும் இதுகாணும் பிரகாசம் என்றமார்க்கம்
நாருநீ பளிச்சென்றால் நந்தியாக நயமாக இதினோடே வாசிசேரு
ஆருநீ அட்சரமும் மகாரத்தோடு அனைந்ததோர் வாசிரெண்டு நாதவிந்தே

விளக்கவுரை :


215. நாதமென்றும் விந்துவென்றும் வாசிக்கபேரு ரவிமதியும் சிவசத்தி என்றுபேரு
வாதமென்றும் வசியமென்றும் அதுக்கேபேரு மனமென்றும் போதமென்றும் இதுக்கேபேரு
நீதமென்றம் பூமியென்றும் இதற்கேபேரு நிலையான வேகமென்றும் கந்தமென்றும் நேரு
காதமென்றும் தாரமென்றும் இதற்கேபேரு கண்ணொளியாய் நின்றது இரண்டும்தானே

விளக்கவுரை :

Powered by Blogger.